மருத்துவ முகாமில் நடந்த விபரீதத்தால் அவஸ்தைப்படும் ராஜாங்கம் குடும்பம் , தமிழ் என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்

By subhashini · 21/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழின் தேர்வுகள் முடியும் வரை சேது தூக்கிக் கொண்டு சென்று வந்தார். இதனால் தமிழ் ரொம்ப சந்தோஷப்பட்டார். இதையெல்லாம் பார்த்த ஈஸ்வரி, தாமரையின் அம்மா, தாமரை எல்லோருமே கோபப்பட்டு தமிழிடம் வம்பு இழுத்தார்கள். அதற்கு தமிழுமே பதிலடி கொடுத்தார். கடைசி தேர்வுக்கு தமிழை அழைத்துக் கொண்டு சேது சென்றிருந்தார். அங்கு ஒரு பிணத்தை வைத்து பிராக்டிகல் எக்ஸாம் நடக்கிறது. அதை பார்த்து சேது பதறிப் போனார். அதற்குப்பின் கேம்ப் மூன்று நாள்கள் போகணும் என்றார்கள்.

இதனால் கோபத்தில் சேது முடியாது என்று தமிழிடம் சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தை பழிவாங்க வேண்டும் என்று அவருடைய எதிரியும் போஸும் சேர்ந்து சேது-தமிழின் விவாகரத்தை பற்றி பிரஸ்மீட்டில் பேச சொன்னார்கள். அப்போது பேட்டி எடுப்பவர்கள் ராஜாங்கத்திடம், சேது-தமிழ் விவாகரத்தை பற்றி கேட்டார்கள். ராஜாங்கம் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். உடனே அங்கு வந்த தமிழ், அதற்கு பதில் நான் சொல்கிறேன் என்றார்.

சின்ன மருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, விவாகரத்து என்பது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இதற்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை. எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து என்னுடைய கல்விக்கு என்னுடைய மாமனார் பெரும் உதவியாக இருந்தார். அந்த மாதிரி தான் இவர் இதையும் செய்தார். மற்றபடி நீங்கள் சொல்வது போல் விளம்பரத்திற்காக அவர் செய்யவில்லை. என்னுடைய குடும்பம் எனக்கு துணையாக தான் இருக்கிறது என்றார். அதற்குப்பின் சேது, தமிழ்ச்செல்வி, ராஜாங்கம் எல்லோருமே வீட்டுக்கு வந்து விட்டார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, கேம்ப் போகும் விஷயமாக ராஜாங்கத்திடம் சொன்னார். பின் அவர், சேதுவை அழைத்து போக சொன்னார். அந்த சமயம் பார்த்து போன் செய்த கட்சி தலைவரின் மனைவி, மருத்துவ கேம்பிற்கு ராஜாங்கத்தையும் போக சொன்னார். அதனால் அவர் ஒத்துக் கொண்டார். பின் குடும்பத்துடன் எல்லோருமே கேம்புக்கு செல்ல தயாராகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் மெடிக்கல் ஷாப் போகணும் என்பதால் தமிழ்ச்செல்வியின் தங்கை சேது விடம் உதவி கேட்டார். ஆனால், அவர் கோபத்தில் கத்தினார்.

https://www.youtube.com/watch?v=1ei9WXsO3u0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் ராஜாங்கம் குடும்பம் தமிழ் உடைய மருத்துவ கேம்பிற்கு செல்கிறார்கள். அங்கு மலைவாழ் கிராம மக்கள், இங்கு ஒரு விஷப்பூச்சி இருக்கிறது. அதனால் எல்லோருமே பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார். அப்போது திடீர் என்று அந்த விஷபூச்சி ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுகிறது. இதனால் எல்லோருமே அவஸ்தைப்படுகிறார்கள். தமிழுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

behindtalkies AMP · Quick view
View full