தமிழ் செல்விக்கு எதிராக சேதுவின் அத்தை செய்யும் சதி வேலை -அடுத்து என்ன? சின்ன மருமகள்

By subhashini · 8/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘சின்ன மருமகள்’. சேதுவின் அத்தை மகள் எப்படியாவது சேதுவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து பல திட்டங்களை போட்டார். ஒரு கட்டத்தில் சேது தன்னை கற்பழித்து ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் டிராமா போட்டார்கள். அதை மொத்த குடும்பம் நம்பி இருந்தது. எப்படியாவது தன் கணவர் மீது இருக்கும் பழியை போக்க வேண்டும் என்று தமிழ்ச்செல்வி போராடி இருந்தார். கடைசியில் தமிழ்செல்வி தான் அதில் வெற்றியும் பெற்றார்.

சேதுவின் மீது போடப்பட்ட பழி முழுவதுமாக நீக்கப்பட்டது. இருவருமே சந்தோஷமாக சேர்ந்து வாழ நினைக்கும் போது தமிழ்செல்வி கர்ப்பமாக இருப்பதாக வீட்டில் எல்லோரிடமும் தமிழ்செல்வியின் அம்மா பொய் சொல்லியிருந்தார். உண்மையை சொல்ல முடியாமல் தமிழ்ச்செல்வி தவித்துக் கொண்டிருந்தார். பின் நாட்கள் செல்ல செல்ல தமிழ் உடைய வயிறு பெரிதாக தெரிய வேண்டும் என்று அவருடைய அம்மா துணியை கட்டி அனுப்பி விட்டார். கடைசியில் வளைகாப்பு நடக்கும்போது உண்மையை தமிழ்செல்வி எல்லோரிடமும் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

சின்னமருமகள் சீரியல்:

இதனால் மொத்த குடும்பமும் உடைந்து விட்டது. வேதனையில் சேது குடிக்க ஆரம்பித்து விடுகிறார். தற்போது சீரியலில் உண்மையிலேயே தமிழ் செல்வி கர்ப்பமாக இருக்கிறார். இந்த சந்தோஷத்தை சேதுவிடம் தமிழ் செல்வி சொல்கிறார். ஆனால், சேது அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ரொம்ப கேவலமாக தமிழ் செல்வியை பேசி விடுகிறார். இதனால் பொங்கி எழுந்த தமிழ்ச்செல்வி, இனி நீ எனக்கு கணவனும் இல்லை. நான் உனக்கு மனைவியும் இல்லை.

நேற்று எபிசோட்:

என் குழந்தையை வளர்த்து என்னால் தனியாளாக நின்று சாதிக்க முடியும் என்று சவால் விட்டு அங்கிருந்து வருகிறார். பின் வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய தந்தை, தன்னுடைய மாமனாரின் பெயரை சொல்லி பணம் வாங்கி குடித்து அழித்தது தெரிந்தது. இதனால் கோபப்பட்ட தமிழ்செல்வி, தன்னுடைய தந்தையிடமும் சண்டை போட்டார். பின் அவர், எனக்கு கணவனும் தேவையில்லை, தந்தையும் தேவையில்லை. என்னால் குழந்தையும் வளர்த்துக் கொண்டு என்னுடைய ஆசைப்பட்ட டாக்டர் படிப்பையும் படிப்பேன் என்று சவால் விட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

தமிழ்செல்வி, மருத்துவ கல்லூரிக்கு கட்டணம் கட்டுவதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இதனால் அவருடைய அம்மா, எல்லா இடத்திலுமே பணத்தை கடனுக்கு கேட்டார். ஆனால், யாருமே பணம் தரவில்லை. தமிழ்செல்வியின் குடும்பத்தை ரொம்ப மோசமாகத்தான் பேசி இருந்தார்கள். இதனால் தமிழ்ச்செல்வியும் அவருடைய அம்மாவும் ரொம்ப வருத்தப்பட்டார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, மொய் விருந்து வைக்கலாம். அதன் மூலம் பணத்தை எப்படியாவது ரெடி பண்ணலாம் என்று யோசித்து ஊர் முழுக்க போஸ்டர் ஓட்டினார்.

https://www.youtube.com/watch?v=8jHDCZdzIYY

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் தமிழ்ச்செல்வி மொய் விருந்து நடத்துகிறார் என்பதை அறிந்த சேதுவின் அத்தை, தமிழ்ச்செல்வியை பழிவாங்க கிடா விருந்து நடத்த தன்னுடைய அண்ணனிடம் கேட்கிறார். அவருமே கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார். ஊரில் உள்ள எல்லோருமே கிடா விருந்துக்கு போவதாக சொல்கிறார்கள். இதை அறிந்த தமிழின் அம்மா தமிழிடம் சொல்லி புலம்புகிறார். அதற்கு தமிழ்செல்வி, என்ன நடந்தாலுமே இந்த மொய் விருந்தை நடத்துவேன் என்று சபதம் போடுகிறார். கிடா விருந்தா vs மொய் விருந்தா என்பதை இனிவரும் நாட்களில் பொறுத்து இருந்து பார்க்கலாம்.

behindtalkies AMP · Quick view
View full