தமிழ்செல்வி- சேது வாழ்க்கையில் என்ட்ரி கொடுத்த புது வில்லன், அடுத்து என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவின் அண்ணி கொடுத்த பணத்தை தமிழ்ச்செல்வி வாங்கிக் கொண்டார். பின் அப்பத்தா, என்னால் நிம்மதியாக தூங்கவே முடியாது. தயவுசெய்து என்னிடம் இருந்து ஏதாவது வாங்கிக் கொள் என்று சொன்னார். உடனே தமிழ் செல்வி , உங்கள் சுருக்குப்பையில் இருக்கும் பணத்தை கொடுங்கள் போதும் என்றார். இன்னொரு பக்கம் சேது குடும்பம் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தார்கள் . அங்குள்ள உறவினர் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று அவர்களை உட்கார வைத்து விட்டார். பின் வீட்டில் உள்ள பெண்கள் சமைக்கவே இல்லை என்று சொன்னார்.
இதனால் அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே அந்தப் பெண், தமிழ்ச்செல்வி சமைத்த சாப்பாட்டை காசு கொடுத்து வாங்கி வந்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி சமைத்த சாப்பாடு என்று தெரியாமல் சேதுவின் வீட்டில் உள்ள எல்லோருமே சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருந்தார்கள். அதற்குப்பின் அப்பத்தாவிடம் சேது, நீங்கள் மொய் விருந்துக்கு போனீர்களா? என்று விசாரித்தார். அப்பத்தா, ஆமாம் போனேன். நீ சாப்பிட்ட சாப்பாடு கூட தமிழ் செல்வி செய்து தந்தது தான் என்று சொன்னவுடன் சேது வாந்தி எடுப்பது போல செய்து கொண்டிருந்தார். பின் பணம் கொஞ்சம் குறைவாக இருப்பதால் கருப்பு சேதுவை சந்தித்து தன்னுடைய சம்பள பாக்கியை வாங்கி கொண்டு தமிழ்செல்வியிடம் கொடுத்தார்.
சின்னமருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் சேதுவுக்கு விவாகரத்து வாங்கி தர வீட்டில் உள்ள எல்லோருமே மும்முரமாக ஈடுபட்டார்கள். அப்போது சேதுவின் கனவில் அவருடைய அம்மா, நீ விவாகரத்து செய்யாதே. தமிழ்செல்வி உடன் சேர்ந்து வாழு என்று சொன்னார். உடனே தூக்கத்தில் இருந்து எழுந்த சேது, அவள் நம் குடும்பத்திற்கு தேவையில்லை. நான் தமிழ்செல்வியை விவாகரத்து செய்யத்தான் போகிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் சேது விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்டு அனுப்பி வைத்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி வேகவேகமாக தன்னுடைய முதல் நாள் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
அந்த சமயம் பார்த்து வக்கீல் நோட்டீஸ் வந்தது. அதை பார்த்தவுடன் தமிழ்ச்செல்வி பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. இதை நான் எதிர்பார்த்ததுதான் என்று சொன்னார். விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய விஷயத்தை தெரிந்தவுடன் தமிழ்ச்செல்வியின் அம்மா, அப்பா, பாட்டி எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் தமிழ்ச்செல்வி, நல்ல வக்கீல் பாருங்கள். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. நான் டாக்டர் ஆவது தான் என்னுடைய ஒரே லட்சியம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்செல்வி முதல் நாள் தன்னுடைய கல்லூரிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு தோழி கிடைக்கிறார். முதல் நாளிலேயே அவர் வகுப்பறையில் மயங்கி விழுகிறார். அப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தன்னுடைய ப்ரொபஷரிடம் சொல்கிறார். அந்த ப்ரொபசரும் தமிழ்செல்வியை பாராட்டுகிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கேன்டினில் தன்னுடைய தோழியுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். அப்போது தமிழ்செல்வியுடன் படித்த பள்ளி நண்பர் ஒருவர் அங்கு கடை வைத்திருக்கிறார். தமிழ்செல்வியை பார்த்தவுடன் அவர் ஆனந்தத்தில் சந்தோஷமாக பேசுகிறார். தமிழ்செல்வியும் அவருடன் நன்றாக பேசுகிறார். இதை எல்லாம் சேதுவின் அத்தை அத்தை வைத்திருக்கும் ஆள் வீடியோவாக எடுக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் அந்த நண்பர், தன்னுடைய நண்பர்களிடம் தமிழ்ச்செல்வியை பற்றி பேசுகிறார். அப்போது அவர், நான் பள்ளி பருவத்தில் அவளை காதலித்தேன். பள்ளி முடிக்கும்போது அவருக்கு திருமணம் நடந்து விட்டது. என் காதலை சொல்ல முடியவில்லை. இப்போது அவள் தனியாகத்தான் இருக்கிறாள். என்னுடைய காதலை அவளிடம் சொல்லி விடுவேன் என்கிறார். இன்னொரு பக்கம் சேதுவின் அத்தை, தமிழ்ச்செல்வி தன்னுடைய ஆண் நண்பருடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் வீடியோவை சேதுவிடம் காண்பிக்கிறார். அதை பார்த்தவுடன் சேது பயங்கரமாக கோபப்பட்டு குடிக்க போகிறார். அப்போது சேதுவை பார்த்த சிலர், இவன் இப்படியே குடித்துக் கொண்டிருப்பதால் தான் இவன் பொண்டாட்டி வேறு ஒருவனுடன் சென்று விட்டாள் என்று மோசமாக தமிழ்செல்வியை பேசுகிறார்கள். இதனால் சேது கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.