ராஜாங்கம் குடும்பத்தை பாராட்டும் ஊர் மக்கள், தமிழ் செல்விக்கு என்ன ஆச்சு? விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 8/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வி, மருந்து எடுத்து விட்டேன். வந்து விடுங்கள் என்று சிக்னல் கொடுத்தார். ஆனால், அது சேது காதில் விழவில்லை. இதை கவனித்த போஸ், தமிழ்ச்செல்வியின் பின்னால் இருந்து தலையில் அடித்தார். தமிழ்ச்செல்வி பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து கிடந்தார். பின் அந்த மருந்தை போஸ் எடுத்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் ராஜாங்கம் குடும்பத்தினர் எல்லோருமே கவலைக்கிடத்தில் இருந்தார்கள். டாக்டர், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வதால் வீட்டில் உள்ள எல்லோருமே அழுது கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்டில் போஸ் மருந்தை எடுத்து வந்து சித்தரிடம் கொடுத்தார். அவர் அந்த மருந்தை பார்த்துவிட்டு எல்லோருக்குமே கொடுக்க, சில பேர் குணமடைந்து விட்டார்கள். சில பேர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருந்தார்கள். இன்னொரு பக்கம் சேது, மருந்து எடுக்கும் போது அந்த வண்டு கடித்து விட்டது. இதனால் அவர் பாதி மயக்கம் நிலையில் தான் இருந்தார். பின் சேது, தான் வரும் வழியில் தமிழ் விழுந்து கிடப்பதை பார்த்து அவரை எழுப்ப பார்த்தார். ஆனால், தமிழ் எழவே இல்லை.

சின்ன மருமகள்:

பின் தமிழை தூக்கிக்கொண்டு சேது ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார். தமிழ் இறந்துவிட்டார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். டாக்டர்களும் தமிழுக்கு சிகிச்சை கொடுத்தார்கள். சேதுவுமே எதுவும் சரியாக பேச முடியாமல் தான் எடுத்து வந்த மருந்தை கொடுத்து மயங்கி விழுதார். வீட்டில் உள்ள எல்லோரும் பதறினார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது கொண்டு வந்த மருந்தை வைத்து எல்லோருக்குமே கொடுத்து காப்பாற்றி விடுகிறார்கள். எல்லோரும் கண்விழித்து விடுகிறார்கள். ஆனால், தமிழ்ச்செல்விக்கு பூச்சி கடிக்கவில்லை என்று சித்தர் சொல்கிறார். டாக்டர்களுமே தமிழ்ச்செல்விக்கு தீவிரமாக சிகிச்சை கொடுக்கிறார்கள். அதற்குப்பின் ஊர் கிராம மக்கள் எல்லோருமே சேதுவையும் போசையும் பாராட்டி பேசுகிறார்கள். அதற்கு பின் போஸ், அவருடைய அம்மா, அக்கா இருவருமே பாராட்டி பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது போஸ், இந்த மருந்தை தமிழ்ச்செல்வி தான் எடுத்து வந்தார். ஆனால், அவளுக்கே தெரியாமல் அவளை அடித்துவிட்டு மருந்தை கொண்டு வந்தேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார்.
அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கண்விழிக்கிறார். அப்போது சேது, நான் சொன்னாலும் நீ கேட்கவில்லை. எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய் என்று திட்டுகிறார். தமிழ் செல்விக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full