அமர்க்களமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் ராஜாங்கம் குடும்பம், மாஸ் காட்டும் சேது - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, நடந்ததை எல்லாம் கருப்பன் தனத்திடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். தமிழின் மனதை மாற்ற என்னெல்லாம் செய்யலாம் என்று அடுத்த திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்யாமல் போன் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணிடம் போஸ் கடலை போட்டுக்கொண்டு அந்த பொண்ணை கரெக்ட் செய்யப் பார்த்தார். ஐஸ்வரியா, சேதுவிடம் ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டிருந்தார்.
இதையெல்லாம் தனம் ஓரமாக நின்று பார்த்தார். அப்போது ஐஸ்வர்யா, சேதுவை உப்பு முட்டை தூக்க சொன்னார். சேது, அதெல்லாம் முடியாது. நாம் ஒன்னும் சின்ன பிள்ளைகள் இல்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதை கவனித்த தனம், எதற்காக மாமாவிடம் இப்படி நடந்து கொள்கிறாய் என்றார். ஐஸ்வர்யா, கிண்டலாக பேசி திட்டினார். இதனால் கோபத்தில் தனம், ஐஸ்வர்யாவை அடித்து விட்டார். உடனே ஐஸ்வர்யா ஓங்கி அறியும்போது தனம் கையை முறுக்கி அனுப்பி விட்டார்.
சின்ன மருமகள்:
வலி தாங்க முடியாமல் ஐஸ்வர்யா கத்தினார். பின் இதைப் பற்றி எல்லாம் ஐஸ்வர்யா, ஈஸ்வரியிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். உடனே ஈஸ்வரி, நீ சேது- தமிழை பிரித்துவிடு. சேதுவை கல்யாணம் செய்து கொள் என்று தேவையில்லாத ஐடியா கொடுத்தார். அதற்குப்பின் போகி பண்டிகை என்பதால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் எரித்தார்கள். மறுநாள் காலையில் பொங்கல் பண்டிகைக்கு மொத்த வீடுமே அலங்காரம் செய்து கோலாகலமாக இருக்கிறது. வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் வீட்டில் சிறப்பாக பொங்கல் விழா நடைபெறுகிறது.
பொங்கல் வைத்து எல்லோரும் சாமி கும்பிட்டு சந்தோசமாக இருக்கிறார்கள். அப்போது தாமரை, கரும்பு உடைக்கும் போட்டி வைக்கலாம் என்று சொல்லி ஒவ்வொரு ஆண்மகன்களையும் அழைக்கிறார். எல்லோருமே ஒரு கரும்பை உடைத்து விடுகிறார்கள். இரண்டு, மூன்று கரும்பு சேர்த்து உடைக்கும் போது போஸ், கருப்பன் கையெல்லாம் அடிபட்டு விடுகிறது.
சீரியல் ட்ராக்:
சேது மட்டும் அசால்டாக உடைக்கிறார். உடனே தாமரை, பத்து கரும்பையும் சேர்த்து உடைக்கணும் என்று சொல்லிவிடுகிறார். முதலில் சேதுவால் உடைக்க முடியவில்லை. உடனே ராஜாங்கம், சேது உடன் சேர்ந்து அந்த கரும்பை உடைக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் கருப்பன், தன்னுடைய கையை உடைத்த தாமரைக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று தனத்துடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். இதுடன் சீரியல் முடிகிறது