கோலாகலமாக ராஜாங்கம் வீட்டில் நடக்கும் பொங்கல் கொண்டாட்டம் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், இது நமக்குள் இருந்த விஷயம். தேவையில்லாமல் இப்படியெல்லாம் எழுதுவதால் என் மனம் மாறாது என்று திட்டி விட்டு சென்றார். சேதுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை குழம்பிப் போய் இருந்தார். இன்னொரு பக்கம் சாவித்திரி, நாம் இருவரும் சண்டை போட வேண்டாம். நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, அதெல்லாம் நடக்காது. இந்த வீட்டில் ஒன்னு நீ இருக்கணும் இல்லை நான் இருக்கணும் என்று பழையபடி சண்டைக்கு நின்றார்.
இதனால் சாவித்திரி சவால் விட்டு சென்றார். இன்னொரு பக்கம் சேது, நடந்ததை எல்லாம் கருப்பன் தனத்திடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். தமிழின் மனதை மாற்ற என்னெல்லாம் செய்யலாம் என்று அடுத்த திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்யாமல் போன் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணிடம் போஸ் கடலை போட்டுக்கொண்டு அந்த பொண்ணை கரெக்ட் செய்யப் பார்த்தார்.
சின்ன மருமகள்:
ஐஸ்வரியா, சேதுவிடம் ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் தனம் ஓரமாக நின்று பார்த்தார். அப்போது ஐஸ்வர்யா, சேதுவை உப்பு முட்டை தூக்க சொன்னார். சேது, அதெல்லாம் முடியாது. நாம் ஒன்னும் சின்ன பிள்ளைகள் இல்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதை கவனித்த தனம், எதற்காக மாமாவிடம் இப்படி நடந்து கொள்கிறாய் என்றார். ஐஸ்வர்யா, கிண்டலாக பேசி திட்டினார். இதனால் கோபத்தில் தனம், ஐஸ்வர்யாவை அடித்து விட்டார். உடனே ஐஸ்வர்யா ஓங்கி அறியும்போது தனம் கையை முறுக்கி அனுப்பி விட்டார்.
சீரியல் ட்ராக்:
வலி தாங்க முடியாமல் ஐஸ்வர்யா கத்தினார். பின் இதைப் பற்றி எல்லாம் ஐஸ்வர்யா, ஈஸ்வரியிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். உடனே ஈஸ்வரி, நீ சேது- தமிழை பிரித்துவிடு. சேதுவை கல்யாணம் செய்து கொள் என்று தேவையில்லாத ஐடியா கொடுத்தார். அதற்குப்பின் போகி பண்டிகை என்பதால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் எரித்தார்கள். மறுநாள் காலையில் பொங்கல் பண்டிகைக்கு மொத்த வீடுமே அலங்காரம் செய்து கோலாகலமாக இருக்கிறது. வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
https://www.youtube.com/watch?v=YiF-R7GeE0s
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராஜாங்கம் வீட்டில் கோலாகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். வீட்டில் தாமரை, தனம் எல்லோருமே சேதுவை கரும்பு உடைக்க சொல்கிறார்கள். சேதுவும் அசால்டாக கரும்பு உடைத்து தள்ளுகிறார். அப்போது ராஜாங்கம், நாம் இருவரும் சேர்ந்து உடைக்கலாமா? என்று சொல்லி ஒரு கட்டை கரும்பு வைத்து இருவரும் மாசாக உடைக்கிறார்கள்.