மருந்தை எடுத்து வந்ததாக போஸை பாராட்டும் ராஜாங்கம், சேது-தமிழ் நிலை என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்- சேது இருவருமே காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் செல்லும் வழியில் எல்லாம் விச உயிரினங்கள் வந்தது. அந்த தடைகளை தாண்டி தமிழ்-சேது சென்றார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு வந்த போஸ், மருந்து காட்டுக்குள் தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு சென்றார். எல்லோரும் வேண்டாம் என்று தடுக்கமே போஸ் கேட்கவில்லை காட்டுக்குள் சென்று விட்டார்.
பின் தமிழ்-சேது இருவரும் வெவ்வேறு பாதையில் சென்றார்கள். அப்போது தமிழ், செல்லும் வழியில் எலும்புக்கூடு தொங்கிருப்பதை பார்த்து பயந்து ஒரு புதை குழியில் விழுந்து விட்டார்.
பின் தமிழ் காப்பாற்றுங்கள் என்று கத்திக்கொண்டு இருந்தார். தமிழ் கத்தும் சத்தம் சேதுவிற்கு கேட்டு விட்டது. பின் தமிழ் போன வழியில் சேது சென்றார். அதற்குள் தமிழ் புதைக்குழிக்குள் சென்று விட்டார்.
தமிழ் புதை குழிக்குள்ளே சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து சேது வந்து விட்டார்.
சின்ன மருமகள்:
பின் ஒரு குச்சியை வைத்து தமிழை புதைகுழியிலிருந்து வெளியே எடுத்து விட்டார். அதற்குப்பின் சேது, எதற்காக வந்தாய் என்று திட்டிக் கொண்டிருந்தார். அதற்கு தமிழ், மாமாவின் உயிரை காப்பாற்ற மருந்து வேண்டும். அதற்காகத்தான் வந்தேன் என்றார். அந்த சமயம் பார்த்து வண்டுகள் வந்தது. ஆனால், இருவரின் மீதும் சேரு இருந்ததால் வண்டுகள் சென்று விட்டது. இதுதான் மருந்து எடுப்பதற்கு சரியான வழி என்று இருவருமே தங்கள் உடலின் மீது சேருகளை பூசிக்கொண்டு போகலாம் என்றார் சேது.
சீரியல் ட்ராக்:
அதற்கு தமிழ், வேண்டாம் தனித்தனியாக சென்று சீக்கிரம் மருந்து எடுக்கலாம் என்று பிரிந்து சென்றார்கள். ஒரு வழியாக மருந்து இருக்கும் இடத்திற்கு தமிழ்ச்செல்வி வந்து விட்டார். பின் வண்டுகளை வெளியே வர வைப்பதற்காக தன் கையை கிழித்து ஒரு துணியில் ரத்தத்தை சிந்தினார். பின் வண்டுகள் ரத்த வாடைக்கு அந்த துணியின் மீது உட்காருகிறது. உடனடியாக தமிழ்செல்வி நெருப்பை போட்டு அந்த வண்டுகள் எல்லாம் கொல்லுகிறார்.
https://www.youtube.com/watch?v=ysmafDdHbgI
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் தமிழ்செல்வி தன்னுடைய உயிரை பணயம் வைத்து விஷ வண்டுகளிடமிருந்து மருந்தை எடுத்து விடுகிறார். பின் மருந்தை எடுத்து விட்டேன் என்று காட்டுக்குள் தமிழ்செல்வி சொல்கிறார். இன்னொரு சேது பக்கம் மருந்து எடுக்க போராடுகிறார். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் மருந்தின் மூலம் எல்லோரையும் காப்பாற்றினார்கள். ராஜாங்கம் குடும்பத்தினர் எல்லோருமே பிழைத்துக் கொண்டார்கள். பின் வீட்டில் ராஜாங்கம், காட்டிற்கு சென்று கஷ்டப்பட்டு மருந்து எடுத்து வந்த போஸிற்கு நன்றி என்று சொல்கிறார். சேது- தமிழின் நிலை என்ன? மருந்தை போஸ் எப்படி கொண்டு வந்தார்.