சாமியார் சொன்ன பரிகாரம், ராஜாங்கம் குடும்பம் எடுத்த முடிவு - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 26/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கனவை கண்டு சேது பயந்து எழுந்தார். எதற்காக இப்படி எல்லாம் கனவு வருகிறது என்று சேது புலம்பினார். இன்னொரு பக்கம் காமேஷ் பிச்சை தன்னுடைய முதலிரவுக்கு அழகாக ரூமை தயார் செய்து வைத்தார். அப்போது வந்த தாமரை அந்த செட்டப்பை பார்த்து கொந்தளித்து பிச்சையிடம் சண்டை போட்டார். அதோடு காமேஷ் பிச்சையை ரூமை விட்டு வெளியே துரத்தினார். சேது, அப்பத்தாவிடம் தான் கண்ட கனவை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பத்தா, நானும் அதே மாதிரி கனவு கண்டேன் என்று நடந்ததை சொன்னார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு ராஜாங்கம், எனக்கும் அந்த கனவு வந்தது என்று சொன்னார். இதனால் அப்பத்தா ரொம்பவே வருத்தப்பட்டார். எதற்காக இந்த கஷ்ட காலம் என்று புலம்பினார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, ஜெனியின் காதலர் சக்தியை சந்தித்து பேசி இருந்தார். அப்போது சக்தி, இனிமேல் இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்ய வேண்டாம். ஏதாவது செய்தால் ஜெனிக்கு சீக்கிரம் கல்யாணம் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

சின்ன மருமகள்:

நான் எதுவாக இருந்தாலும் சொல்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் காமேஸ் பிச்சை முதலிரவு நடந்தது போல செட்டப் செய்து சாவித்திரியை வெறுப்பேற்றுகிறார். இதனால் கோபப்பட்ட சாவித்திரி, தாமரை இடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தாமரை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். பின் காமேஷ் பிச்சை அவர்கள் சாப்பிட சாப்பாடு, துணிக்கு பணம் கொடுத்துவிட்டு தன்னுடைய தொழிலுக்கு சென்றார். இதனால் சாவித்திரி- தாமரை இருவரும் கொந்தளித்தார்கள். பின் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் ஒரு சாமியாரை சந்தித்து தாங்கள் கண்ட கனவை பற்றி சொன்னார்கள். அதற்கு அவர், இதெல்லாம் விதியின் விளையாட்டு. எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கிறது என்று சோலியை உருட்டுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாமியார், நீங்கள் முருகன் மீது பாரத்தை இறக்கி வைத்துவிட்டு காவடி எடுங்கள். சூரிய கிரகணம் முடிவதற்குள் அந்த காவடி எடுத்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு பிரச்சனை வரும் என்று சொல்கிறார். இதனால் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் சரி என்கிறார்கள். பின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், சாமியார் சொன்ன பரிகாரத்தை பற்றி சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே பரிகாரம் செய்வதற்கு ஒத்துக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் பசி தாங்க முடியாமல் தாமரை- சாவித்ரி இருவரும் காமேஷ் பிச்சை கொண்டு வந்து சாப்பாட்டை சாப்பிட்டு விடுகிறார்கள்.

சீரியல் டிராக்:

அதற்குப் பின் காமேஷ் பிச்சை கொடுத்த பணத்தில் துணியை வாங்கி போட்டுக் கொள்கிறார்கள்.
அந்த சமயம் பார்த்து அந்த வீட்டின் ஓனர் வாடகை கட்டவில்லை என்ற பிரச்சனை செய்ததால் தாமரை- சாவித்திரி இருவருமே காமேஸ் இருக்கும் கோயிலுக்கு வந்து விடுகிறார்கள். பின் தாமரை நடந்ததை சொல்லி பிச்சையிடம் சண்டை போடுகிறார். காமேஸ், நான் டைம் வாங்கிக் கொண்டு வருகிறேன். இங்கே உட்காரு என்று பிச்சை எடுக்கும் இடத்தில் உட்கார வைத்து விடுகிறார். தாமரை- சாவித்ரி இருவரும் பிச்சைக்காரர்கள் என்று கோயிலுக்கு வருபவர்கள் காசு போடுகிறார்கள். இதனால் இருவருமே கத்தி கலாட்டா செய்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full