சேதுவின் முடிவை ஏற்றுக்கொண்டாரா ராஜாங்கம்? தமிழ்செல்வி சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்

By subhashini · 7/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம்-சேது இருவரும் தங்களை வெற்றி பெற வைத்த மக்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டு வந்தார்கள். அப்போது தமிழ்ச்செல்வியின் போஸ்டரை பார்த்து சேது, ராஜாங்கம் கோவப்பட்டார்கள். சேதுவின் அண்ணன் அந்த போஸ்டரை கிழித்து போட்டார். வீட்டிற்கு வந்தவுடன் சேது, தமிழ்ச்செல்வியின் மீது கொந்தளித்துக் கொண்டிருந்தார். ஈஸ்வரி இதுதான் சந்தர்ப்பம் என்று தமிழ்ச்செல்வியை பற்றி ரொம்ப மோசமாக பேசி சேதுவின் மனதில் நஞ்சை வளர்த்தார்.

தங்களுக்கு எதிராக ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியது தமிழ் தான் என்று தவறாக புரிந்து கொண்டு சேதுபதி கொந்தளித்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, சாவித்திரி இருவருமே ஏற்றி விட்டார்கள். அப்பத்தா சொல்வதைக் கூட சேதுபதி கேட்கவில்லை. ராஜாங்கம், எது நடந்தாலும் நம்முடைய வேலையில் கவனம் செலுத்தலாம் என்று அறிவுரை சொன்னார். அதற்குப்பின் சேது தனியாக இருக்கும் நேரம் பார்த்து ஈஸ்வரி, நீ தமிழை பழிவாங்க வேண்டும் என்றால், அவளை உன் வாழ்க்கையை விட்டு விலகி விடு. நீ வேறு ஒரு கல்யாணம் செய்து கொள் என்றார்.

சின்ன மருமகள்:

இதைப்பற்றி சேது தீவிரமாக யோசித்தார். பின் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து சேது, என்னையும் தமிழ்செல்வியையும் முடித்துவிடுங்கள். இனி அவளுடன் நான் சேர்ந்து வாழப்போவதில்லை என்றார். இதைக் கேட்டு அப்பத்தா கதறி அழுதார். ராஜாங்கத்திற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஈஸ்வரி- சாவித்திரி இருவருமே சேதுவின் முடிவை பாராட்டினார்கள். சேது, நான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அதற்கான முடிவை நீங்கள் எடுங்கள் என்று சொல்லிவிட்டார். இதைக் கேட்டு மலர் ரொம்பவே அழுதார். பின் இதைப் பற்றி மலர்- கருப்பன் இருவரும் தமிழுக்கு போன் செய்து சொன்னார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கருப்பன், சேது உன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு திருமணம் செய்யப் போகிறான். வீட்டில் உள்ள எல்லோருமே சம்மதம் சொல்லிவிட்டார்கள் என்கிறார். தமிழ்செல்வி, இதை நான் எதிர்பார்த்ததுதான். நீங்கள் அதைப் பற்றி எதுவும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். பின் வீட்டில் தமிழ் செல்வின் அம்மா, சேது எடுத்த முடிவை நினைத்து ரொம்பவே வேதனைப்பட்டு கொண்டு இருக்கிறார். தமிழ்ச்செல்வி, நம்மை வேண்டாம் என்று
சொன்னவருக்காக கெஞ்ச தேவை இல்லை. என்னுடைய வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன்.

சீரியல் ட்ராக்:

இனி என் குழந்தைக்காக நான் வாழ்வேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ராஜாங்கம் வீட்டில் அப்பத்தா, சேதுவின் முடிவை பற்றி யோசிக்க சொல்லுங்க என்கிறார். ராஜாங்கம், சேது எந்த முடிவெடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் சேது வாழ்க்கையில் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார்கள். ஈஸ்வரி, எப்படியாவது ஐஸ்வர்யாவை சேதுவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற திட்டம் போடுகிறார். அதே போல் சாவித்ரி, தன் மகளுக்கு விவாகரத்து வாங்கி வைத்துவிட்டு சேதுவுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full