தமிழ்செல்வியின் ஆசையை நிறைவேற்றுவாரா ராஜாங்கம்? பயத்தில் சேது - சின்ன மருமகள்

By subhashini · 12/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, சாவித்திரி போட்டோவை வைத்து காமேஷ் பிச்சை நன்றாக சம்பாதித்து விட்டார். பின் அந்த பணத்தில் காமேஷ், ஸ்வீட் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து தாமரை- சாவித்திரிக்கு கொடுத்தார். இருவருமே பயங்கர கடுப்பில் இருந்தார்கள். பின் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் தாமரை மீது தூவி அள்ளி வீசி காமேஷ் சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் ராஜாங்கம் வீட்டில் கட்சி விஷயமாக மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது சேது தண்ணீர் பழத்தை வயிற்றில் கட்டிக்கொண்டு வந்தார்.

அதை பார்த்து எல்லோருமே சிரித்தார்கள். ராஜாங்கம், என்ன கோலம் என்று கேட்கிறார்? சேது, தமிழுக்காக இதையெல்லாம் செய்கிறேன் என்றார். ராஜாங்கத்தால் எதுவுமே பேச முடியவில்லை. பின் தமிழ்ச்செல்விக்காக அன்று முழுவதுமே தண்ணீர் பலத்தைக் கட்டிக் கொண்டு சேது எல்லா இடத்திற்கும் சென்றார். பின் இதை அறிந்த தமிழ்ச்செல்வி, தன் கணவர் தனக்காக செய்த விஷயத்தை எல்லாம் நினைத்து ரொம்பவே எமோஷனலாக ஃபீல் பண்ணுகிறார்.

சின்ன மருமகள்:

இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, எனக்கு மண்வாசனை ரொம்ப பிடிக்கும். அந்த வாசனை பிடிக்க வேண்டும் என்று கேட்கிறார். உடனே எல்லோரும் எப்படி முடியும் என்று கேட்கிறார்கள். உடனே சேது, லாரி டேங்கில் இருந்து மழை பெய்வது போல தண்ணீரை ஊற்ற வைக்கிறார். அந்த தண்ணீர் மண்ணில் படுவதால் மண்வாசனை வருகிறது. உடனே தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்படுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே மழையில் சந்தோசமாக ஆடிப்பாடி விளையாடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பாகிறது.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ராஜாங்கம், வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தமிழ்செல்வி, நான் இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து பெண்கள்தான் சமைக்கிறார்கள். இன்று ஒரு நாளைக்கு பெண்களுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும். ஆண்கள் தான் சமைக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் ஈஸ்வரி திட்டுகிறார். ராஜாங்கமும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். சேது, பிரச்சனை ஏதாவது வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். உடனே ராஜாங்கம், இது தான் உன்னுடைய ஆசை. நாங்கள் எல்லோரும் சமைக்கிறோம். பெண்கள் எல்லோருமே ரெஸ்ட் எடுங்கள் என்று சொல்கிறார்

https://www.youtube.com/watch?v=zQZ1Brpblk8&list=PLsSTkBgqx7osGSq5Ugc8zEl-PmIH3G-GN

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராஜாங்கம், உனக்கு என்ன ஆசை என்று சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்று கேட்கிறார். தமிழ்செல்வி, இந்த வீட்டிற்கு நான் வந்த நாளிலிருந்து பெண்கள் தான் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் பெண்கள் யாரும் சமையல் ரூமிற்கு
போகக்கூடாது. எங்களுக்கு லீவ் வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் மோகனா பயப்படுகிறார். சேதுவிற்கும் ஒன்றுமே புரியவில்லை. ராஜாங்கம் எழுந்து நின்று அமைதியாக முறைக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full