ராஜாங்கம் குடும்பத்தை ஒதுக்கி விட்ட வெள்ளத்தாய், சந்தோஷத்தில் கொண்டாடும் தமிழ் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அப்பத்தா, அவளுடைய நியாயத்தை கேட்க வந்திருக்கிறாள். உரிமையை கேட்கிறாள் என்றார். தமிழ்ச்செல்வி, அதெல்லாம் ஒன்றும் இல்லை. என்னை அறுத்து விட்டுட்டு அவர் எத்தனை கல்யாணம் வேனாலும் பண்ணிக்கொள்ளட்டும். எனக்கு அதில் கவலை இல்லை. எனக்கு அவர் கட்டின தாலி ரொம்ப பாரமாக இருக்கிறது. என்னை அத்து விடுங்கள் என்றார். இதைக் கேட்டு எல்லோருமே ஆடி போகிறார்கள். அப்பத்தா, எதற்காக இப்படி முடிவெடுத்தாய்? என்றார். தமிழ்செல்வி,எனக்கு இந்த வாழ்க்கையில் விருப்பமில்லை என்றார்.
தமிழ், என்னை அத்துவிட்டால் நான் யாருடைய வாழ்க்கையிலும் விஷயத்திலும் தலையிட போவதில்லை என்றார். தமிழின் அப்பா- அம்மா எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால், தமிழ் தன் முடிவில் உறுதியாக இருந்தார். சேது, எங்கள் இருவரையும் அத்து விடுங்கள் என்று கொந்தளித்தார். ஊர் தலைவர்கள் எல்லோருமே சேர்ந்து தமிழ்-சேது இருவரையும் பிரித்து விட்டார்கள். இனி சேது- தமிழ் இரண்டு குடும்பத்திற்குமே சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதை எல்லாம் பார்த்த அப்பத்தா ரொம்பவே நொறுங்கிப் போனார்.
சின்ன மருமகள்:
தமிழ்செல்வியும் தன் கழுத்தில் இருக்கும் தாலியை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அதற்குப் பின் சேது- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதை பார்த்து அப்பத்தா, இவ்வளவு அநியாயம் செய்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. இனி உங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உங்களை அத்து விடுகிறேன் என்று அங்கு இருந்து கிளம்பி போனார். ஈஸ்வரி, அப்பத்தாவ அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றார். தமிழ்செல்வியின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, கோவிலில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனல் ஆக அழுதார். தமிழ்ச்செல்வி, அப்பத்தாவிற்கு ஆறுதல் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, இனி எனக்கும் அந்த குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை. நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன் என்று கேட்கிறார். தமிழ்செல்வி, சந்தோஷத்தில் அப்பத்தாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இன்னொரு பக்கம் ராஜாங்கம், தன்னுடைய அம்மா போனதை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். ஈஸ்வரி, இதற்கெல்லாம் காரணம் தமிழ்செல்வி தான் என்று தேவையில்லாமல் பழி போட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து சேதுவிற்கு கடுப்புதான் ஆகிறது.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, படித்துக் கொண்டிருக்கும் போது கல்லூரி ஆசிரியர், உன்னை சிறந்த மாணவியாக தேர்ந்தெடுத்து இருக்கிறோம். அதற்காக பள்ளியில் விழா நடத்த இருக்கிறோம் என்று சொல்கிறார். இதை கேட்டு தமிழ் செல்வி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். வீட்டில் உள்ள எல்லோரிடம் சொல்லி தமிழ் கொண்டாடுகிறார். அதற்குப்பின் சேது, எந்த கவலையும் இல்லாமல் குடித்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து கருப்பன் சண்டை போடுகிறார்.