சாவித்திரி செய்த வேலையால் கொந்தளித்த ராஜாங்கம், வேதனையில் தமிழ்செல்வி சொன்னது - சின்ன மருமகள்

By subhashini · 31/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சீர்வரிசைக்கு ஆசைப்பட்டு தான் சாவித்திரி- தாமரை இருவரும் இப்படி செய்தார்கள் என்று எல்லா உண்மையும் சொல்லிவிட்டார். இதனால் ராஜாங்கம் பயங்கர கோபப்பட்டார். அப்பத்தா, சாவித்திரி- தாமரையை திட்டி கோயிலை விட்டு வெளியே போக சொன்னார். பின் காவியா, நீங்கள் பயப்பட தேவையில்லை. இரண்டு வசதி வாய்ப்பற்ற ஜோடிகளை அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டேன். அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ராஜாங்கம், காவியாவிற்கு நன்றி சொன்னார். ஈஸ்வரி, இதுதான் சந்தர்ப்பம் என்று காவியாவை புகழ்ந்து பேசி இருந்தார்.

நல்லபடியாக பத்து ஜோடிகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதற்குப்பின் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் திருமண பரிசாக 15 லட்சம் ரூபாய் தொகை உள்ள பொருட்களை ராஜாங்கம் கொடுத்தார். அதற்குப்பின் சாவித்திரி- தாமரை இருவரும் அசிங்கப்பட்டதை நினைத்து ஈஸ்வரி, சித்ரா இருவரும் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். அதோடு காவியாவையும் பாராட்டினார்கள். அதற்கு காவியா, இதை யாரு செய்திருந்தாலும் நான் சொல்லியிருப்பேன் என்று ஈஸ்வரி மூக்கை உடைத்து விட்டு சென்றார். அதற்குப்பின் எல்லோருக்குமே சிறப்பான அன்னதானம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்,

சின்ன மருமகள்:

இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று சாவித்திரி- தாமரை இருவருமே சேர்ந்து திட்டம் போட்டார்கள். பின் இருவரும் பல்லி, கரப்பான் பூச்சி எல்லாம் சாம்பாரில் போட்டு விட்டார்கள். எல்லோரும் சாப்பிடும் நேரம் பார்த்து சாவித்திரி, யாரும் சாப்பிடாதீர்கள். சாப்பாட்டில் பல்லி விழுந்திருக்கிறது என்று சத்தம் போடுவதால் எல்லோருமே சாப்பாடு செய்யும் இடத்திற்கு வந்து பார்க்கிறார்கள். சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து மொத்த குடும்பமே சாக்கில் இருக்கிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாப்பாட்டை பார்த்து ஊர் மக்கள் எல்லோருமே பதறிப் போய், இப்படி எல்லாம் அன்னதானம் போடுவதா? என்றெல்லாம் எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். கோபத்தில் கொந்தளித்த ராஜாங்கம். சாப்பாடு ஏற்பாடு செய்தவர்களை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே ராஜாங்கத்தின் மூத்த மகன்- கருப்பு, இது நம்முடைய சாப்பாடு இல்லை. இது வேறொருவர் கொண்டு வந்து சாப்பாடு. நம்முடைய சாப்பாடு அங்கு பத்திரமாக இருக்கிறது என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள பெருமூச்சு விடுகிறார்கள். சாவித்திரி-தாமரை இருவரும் பிளான் சொதப்பியதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அதற்குப்பின் நல்லபடியாக அன்னதானமும் முடிவடைகிறது.

சீரியல் ட்ராக்:

எல்லோருமே தமிழ்- சேது இருவரையும் வாழ்த்துகிறார்கள். சாவித்திரி- ஈஸ்வரி இருவருமே தனித்தனியாக இந்த மூன்றாவது பரிகாரம் நிறைவேறக்கூடாது என்றெல்லாம் திட்டம் போடுகிறார்கள். இன்னொரு பக்கம்
மலர், மாமா திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி பெருமையாக பேசுகிறார். தமிழ், இதன் மூலம் மற்றவர்களுக்கு நல்லது நடக்கிறது என்பதால் தான் நான் ஒத்துக்கொண்டேன். எனக்கு இந்த திருமண கொண்டாட்டத்தில் விருப்பம் கிடையாது. ஊர்மத்தியில் என்னை அவ்வளவு அசிங்கப்படுத்திவிட்டு மீண்டும் என்னால் பழையபடி இருக்க முடியாது என்று அங்கிருந்து சென்று விடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full