தமிழ்செல்வி மீது கோபப்பட்ட ராஜாங்கம், அப்பத்தா சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மேரி, குழந்தைகள் நன்றி சொல்லி உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் என்றார். இதை கேட்டு தமிழ் ரொம்பவே எமோஷனலாகி கதறி அழுதார். இன்னொரு பக்கம் தன் மகனின் திருமணத்திற்காக ஈஸ்வரி ராஜாங்கத்திடம் பேசி இருந்தார். அவருமே எம்எல்ஏவுக்கு போன் செய்து போஸை பற்றி சொன்னார். அவர்களும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள். இதை பார்த்து மலர் சங்கடப்பட்டார். இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஈஸ்வரி சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடினார்.
தமிழ்செல்வியின் தங்கை, நீங்கள் அக்காவின் பிறந்தநாளுக்கு கொடுத்த கிஃப்ட்டும், வாழ்த்தும் சூப்பராக இருக்கிறது என்றார். அப்போது சேது பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்த்தார். ஆசிரமத்தில் இருந்து சேதுவுக்கு போன் செய்த மேரி, தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளுக்கு ஸ்பான்சர் செய்கிறீர்களா? யாருமே எங்களுக்கு செய்யவில்லை. குழந்தைகள் பட்டினியாக இருக்கிறார்கள் என்று சொல்வதால் சேதுவும் ஒத்துக்கொண்டார்.
பின் சேது, நான் குழந்தைகளுக்காக தான் சாப்பாடு கொடுக்க ஒத்துக் கொண்டேன் என்று உண்மையை சொன்னார். ஆனால், தமிழ்செல்வியின் தங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் திருமணத்திற்கு ராஜாங்கம் சம்மதித்ததால் ஈஸ்வரி தன்னுடைய மகன் போஸ் இடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். பின் சேது, 12 மணி ஆக இருப்பதால் தமிழ்ச்செல்விக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னார். தமிழ்செல்வி, சேதுவிற்கு நன்றி சொன்னார். மறுநாள் காலையில் தமிழ்ச்செல்வி, கல்லூரிக்கு சென்றிருக்கும்போது ஜெனியின் வீட்டில் காதல் ஏற்றுக்கொள்ளாததால் பிரச்சனை செய்கிறார்கள். இதனால் ஜெனி ரொம்பவே எமோஷனலாக அழுது புலம்பி கொண்டிருந்தார். அதற்குப்பின் மலர், வீட்டை விட்டு கிளம்புவதாக சொன்னார். ராஜாங்கம், அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம், நீ இந்த வீட்டு மருமகள் தான். யாருக்கு கல்யாணம் ஆனாலும் நீ இந்த வீட்டு மருமகள் என்பதை யாராலும் மாற்ற முடியாது. நீ இங்கேயே இரு என்று சொல்வதால் மலர் சந்தோஷப்படுகிறார். அதற்குப் பின் ராஜாங்கம், தன்னுடைய கட்சிக்காரர்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறார். அப்போது தமிழ்ச்செல்வி வேலை செய்யும் ஹோட்டலுக்கு ராஜாங்கம் செல்கிறார். அங்கு தமிழ்செல்வி இருப்பதை பார்த்து ராஜாங்கம் ஷாக் ஆகினார். தமிழ்ச்செல்வி பயத்தில் அமைதியாக இருந்தார்.
சீரியல் ட்ராக்:
தமிழ்செல்வி, எல்லோருக்கும் டீ கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து ராஜாங்கவிற்கு கோபம் அதிகமாகின்றது. பின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், தமிழ் ஹோட்டலில் வேலை செய்வதை பற்றி சொல்லி கொண்டிருக்கிறார். அப்போது அப்பத்தா, அவள் செய்யும் வேலை ஒன்னும் தவறு கிடையாது. தன்னுடைய சொந்தக் காலிலே நின்று சுயமரியாதையை விடாமல் சம்பாதித்து தன்னுடைய லட்சியத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவள் செய்வது சரிதான் என்று அப்பத்தா சப்போர்ட் செய்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது