செல்லபாண்டியால் அவமானப்பட்ட ராஜாங்கம், தமிழ்செல்வி என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்

By subhashini · 10/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது தனியாக ரூமில் இருப்பதை பார்த்து அவருடைய சித்தி,அத்தை எல்லோரும் சேர்ந்து தமிழ்ச்செல்வியை பற்றி தப்பு தப்பாக பேசி இருந்தார்கள். இதனால் கோபப்பட்டு சேது, நீங்கள் தமிழ் செல்வி பற்றியை பேசுவதற்கு தகுதி இல்லை. என்ன செய்யணும் என்று எனக்கு தெரியும். தேவை இல்லாதது பற்றி பேசாதீர்கள் என்று திட்டி அவர்களை வெளியே அனுப்பி விட்டார். காலையில் சேது கோர்ட்டுக்கு கிளம்ப தயாராகி இருந்தார். அப்போது சேதுவின் அப்பா ராஜாங்கம், நீ குடும்பத்திற்காக எல்லாம் விவாகரத்துக்கு செய்ய வேண்டாம்.

உன்னுடைய மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்றார். உடனே சேது, நான் விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என்றார். அதற்குப்பின் அப்பத்தா, விவாகரத்து செய்ய வேண்டாம் என்று சேதுவிடம் அழுது புலம்பி இருந்தார். ஆனால், சேது அப்பத்தாவை திட்டி விட்டு சென்று விட்டார். பின் கோர்ட்டுக்கு சேது, தமிழ்ச்செல்வி வந்துவிட்டார்கள். நீதிபதி வழக்கை விசாரித்தார். அப்போது சேது, எனக்கு விவாகரத்து வேண்டும் என்றார். ஆனால், தமிழ் செல்வி விவாகரத்து வேண்டாம் என்றார். இதனால் நீதிபதி, விவாகரத்து வாங்குவதற்கு என்ன காரணம் என்று சேதுவிடம் கேட்டார்.

சின்னமருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் சேது, என்னிடம் அவள் பொய் சொல்லிவிட்டாள். அதனால் தான் விவாகரத்து கேட்கிறேன் என்றவுடன் நீதிபதி, பொய் சொன்னதற்கெல்லாம் விவாகரத்தா? என்றார். அப்பொழுது தமிழ்ச்செல்வி, நான் பொய் சொன்னது உண்மைதான். அதானல் அவர் ரொம்பவே காயம் அடைந்திருந்தார். ஆனால், நான் விவாகரத்து கொடுக்க விருப்பமில்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு கணவன் இல்லை என்றாலும் என்னுடைய குழந்தை பிறக்கும்போது அப்பா வேண்டும். அதனால் நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று சொல்வதால் சேது பயங்கரமாக கோபப்பட்டார். உடனே நீதிபதி, ரெண்டு பேரும் சேர்ந்து ஆறு மாசம் வாழுங்கள். இந்த தீர்ப்பை நான் காலத்திடமே விடுகிறேன் என்றார்.

நேற்று எபிசோட்:

இதனால் சேதுவின் அத்தை கோபப்பட்டார். அதற்குப்பின் சேதுவின் சித்தி, தமிழ்ச்செல்வி சொல்லாததை எல்லாம் சொன்னார். அதனால் சேது அத்தை, தமிழ்ச்செல்வியிடம் செக் கொடுத்து உனக்கு எவ்வளவு வேண்டுமோ பணத்தை எடுத்துக் கொண்டு விவாகரத்து கொடுத்துவிடு என்றார். உடனே தமிழ்ச்செல்வி, தன்னிடம் இருந்த சில்லறையை கொடுத்து நீங்கள் தொகையை எழுதிக் கொண்டு நான் கொடுத்த சில்லரையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். இதனால் சேது, தமிழ்ச்செல்வி மீது கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செல்லப்பாண்டி செய்த வேலையால் ராஜாங்கம் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். அவர், தன்மீது தவறில்லை என்று எவ்வளவு சொல்லியுமே பத்திரிக்கையாளர்கள் மோசமான கேள்விகளை எல்லாம் கேட்கிறார்கள். இதனால் ராஜாங்கம், செல்லப்பாண்டியை திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த சேது, கோர்ட்டில் விவாகரத்து கிடைக்கவில்லை. தமிழ்ச்செல்வி கொடுக்கவில்லை என்று நடந்ததை சொல்கிறார். இதனால் அப்பத்தா, சேதுவின் அம்மா எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

ராஜாங்கம் மட்டும் கோபத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது சேதுவின் அத்தை, சித்தி இருவருமே இன்னும் கொஞ்சம் தமிழை பற்றி தவறாக பேசி ஏத்தி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் பாட்டி விவாகரத்தை பற்றி கேட்கிறார். அப்போது தமிழ்செல்வியின் அம்மா, கோர்ட்டில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போக தயாராகி இருக்கிறார். அவருடைய அம்மாவுமே வாழ்த்தி அனுப்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full