போஸை மன்னித்து ஏற்றுக்கொண்ட ராஜாங்கம், உண்மையை கண்டுபிடிப்பாரா தமிழ்? சின்ன மருமகள்

By subhashini · 9/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் மருந்தை எடுத்து வந்து சித்தரிடம் கொடுத்தார். அவர் அந்த மருந்தை பார்த்துவிட்டு எல்லோருக்குமே கொடுக்க, சில பேர் குணமடைந்து விட்டார்கள். சில பேர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருந்தார்கள். இன்னொரு பக்கம் சேது, மருந்து எடுக்கும் போது அந்த வண்டு கடித்து விட்டது. இதனால் அவர் பாதி மயக்கம் நிலையில் தான் இருந்தார். பின் சேது, தான் வரும் வழியில் தமிழ் விழுந்து கிடப்பதை பார்த்து அவரை எழுப்ப பார்த்தார்.

இருந்தும் தமிழ் எழவே இல்லை. பின் தமிழை தூக்கிக்கொண்டு சேது ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார். தமிழ் இறந்துவிட்டார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். டாக்டர்களும் தமிழுக்கு சிகிச்சை கொடுத்தார்கள். சேதுவுமே எதுவும் சரியாக பேச முடியாமல் தான் எடுத்து வந்த மருந்தை கொடுத்து மயங்கி விழுதார். வீட்டில் உள்ள எல்லோரும் பதறினார்கள்.

சின்ன மருமகள்:

சேது கொண்டு வந்த மருந்தை வைத்து எல்லோருக்குமே கொடுத்து காப்பாற்றி விட்டார்கள். எல்லோரும் கண்விழித்து விட்டார்கள். ஆனால், தமிழ்ச்செல்விக்கு பூச்சி கடிக்கவில்லை என்று சித்தர் சொன்னார். டாக்டர்களுமே தமிழ்ச்செல்விக்கு தீவிரமாக சிகிச்சை கொடுத்தார்கள். அதற்குப்பின் ஊர் கிராம மக்கள் எல்லோருமே சேதுவையும் போசையும் பாராட்டி பேசி இருந்தார்கள். அதற்கு பின் போஸ், அவருடைய அம்மா, அக்கா இருவருமே பாராட்டி பேசினார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது போஸ், இந்த மருந்தை தமிழ்ச்செல்வி தான் எடுத்து வந்தார். ஆனால், அவளுக்கே தெரியாமல் அவளை அடித்துவிட்டு மருந்தை கொண்டு வந்தேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்.
அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கண்விழித்தார். அப்போது சேது, நான் சொன்னாலும் நீ கேட்கவில்லை. எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய் என்றார். தமிழ் செல்விக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் குடும்பத்தினர் எல்லோருமே ஊர் மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பி தங்களுடைய வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அப்போது ஈஸ்வரி, போஸ் தான் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றினான். அவனுக்குதான் நாம் எல்லோரும் நன்றி கடன் பட்டிருக்கோம் என்றெல்லாம் சொல்கிறார். உடனே ராஜாங்கம், போஸை மன்னித்து விட்டு வீட்டிலேயே தங்க சொல்கிறார். இதனால் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் தமிழுக்கு உடம்பு முழுவதும் அடிபட்டு இருப்பதால் அவர் தங்கை ஒத்தடம் கொடுக்கிறார். அப்போது தமிழின் தலையில் அடிபட்டு இருப்பதை அவருடைய தங்கை பார்த்து விசாரிக்கிறார். தமிழ், நான் மருந்து எடுத்துட்டு வரும்போது யாரோ என்னை தலையில் அடித்தது போல இருக்கிறது. அப்போதுதான் நான் மயங்கி விழுந்தேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full