ராஜாங்கம் சொன்ன விஷயத்தால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஈஸ்வரி - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ், காவியாவை தனியாக சந்தித்து பேசி இருந்தார். அப்போது தன் அம்மா சொன்னது போல வைரமுத்து காவியாவிற்க்கு கிப்டாக கொடுத்தார். அப்போது காவியா, எனக்கு பொய் சொன்னா பிடிக்காது. நீங்கள் இதுவரை பொய் சொல்லி இருந்தால் இனிமேல் பொய் சொல்லக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். பின் இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த போஸ், நடந்தது எல்லாம் ஈஸ்வரியிடம் சொன்னார். இதையெல்லாம் ஓட்டு கேட்ட தாமரை- சாவித்திரி இருவருமே கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றார்கள்.
இன்னொரு பக்கம் இடியும் மின்னலுமாக இருப்பதால் தமிழ்ச்செல்வி பயந்து போய்
சேதுவை உள்ளே தூங்க சொன்னார். பின் சேது உள்ளே வரும்போது இடி அதிகமாக இடித்ததால் தமிழ் கட்டிபிடித்து விட்டார். பின் மின்னலில் வெளியே தீப்பிடித்து எரிந்தது. ஒருவழியாக எல்லோருமே தீயை அணைத்தார்கள். அப்போது சேது மட்டும் வெளியே இருந்தால் அவர் மீது இடி விழுந்திருக்கும். நல்லவேளை தமிழ் காப்பாற்றி விட்டார் என்று சொல்வதால் சேது எதுவும் சொல்லாமல் அமைதியாக உள்ளே போனார்.
சின்ன மருமகள் சீரியல்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாவித்திரி, தாமரை இருவருமே ஈஸ்வரிக்கு வரப்போகும் மருமகளை பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கோபப்பட்டு ஈஸ்வரி சண்டைக்கு போகிறார். பின் அந்த சமயம் ராஜாங்கம் வந்தவுடன் எல்லோருமே அமைதியாக இருக்கிறார்கள். பின் கல்லூரியிலிருந்து ராஜாங்கத்திற்கு போன் செய்து, முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு கல்லூரி பீஸ் செலுத்துவதாக சொன்னீர்கள். எப்போது கல்லூரிக்கு வருகிறீர்கள்? விழா ஏற்பாடு செய்ய தேதி கொடுங்கள் என்று கேட்கிறார். அதற்கு ராஜாங்கம் சம்மதிக்கிறார்.
இன்றைய எபிசோட்:
பின் கல்லூரி ஆசிரியர், உங்கள் மருமகள் தமிழ்ச்செல்வி தான் முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்று சொன்னவுடன் ராஜாங்கம் எதுவுமே சொல்லலே அமைதியாக இருக்கிறார். அப்பத்தா மட்டும் ரொம்ப
சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் மலர் பத்தாம் வகுப்பில் அதிகமாக மதிப்பெண் பெற்றிருப்பதை அறிந்த தமிழ், நீங்கள் மேற்கொண்டு படிக்கணும் என்று சொல்கிறார். அதற்கு மலர், எனக்கு படிக்கணும் என்று ரொம்ப ஆசை இருந்தது, ஆனால், முடியவில்லை.
சீரியல் ட்ராக்:
எனக்கு வக்கீல் ஆகணும் என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு தமிழ் செல்வி, நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்., தயவுசெய்து நீங்கள் மேற்கொண்டு படியுங்கள் என்று உத்வேகம் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி என் மகனை மேனேஜரில் இருந்து முதலாளி ஆக்க முடியாதா? என்றெல்லாம் கேட்கிறார். இதைக் கேட்டு ராஜாங்கம், திருமணத்திற்கு முன்பு உன் மகனுக்கு ஒரு கோடி ரூபாயில் செக் தருகிறேன். அதை வைத்து சொந்தமாக தொழில் செய்துகொள் என்று சொல்கிறார். ஈஸ்வரி சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.