ஜெனியின் காதலுக்கு சப்போர்ட் செய்யும் தமிழ்-சேது, ராஜாங்கத்திற்கு வந்த தடங்கல் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் சேரில் உட்கார்ந்த உடன் ராஜாங்கம் வந்து விட்டார். ஆரம்பத்தில் ராஜாங்கம் முறைத்தார். பின் சேது, தமிழின் ஆசையை சொன்னவுடன் ராஜாங்கமும் எல்லோருடன் சேர்ந்து தமிழை அமர வைத்து போட்டோ எடுத்துக் கொண்டார். அதற்குப்பின் சேது, தமிழிடம் அவருடைய ஆசையை கேட்டு கேட்டு செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் ஜெனி தங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்வதை பற்றி தமிழிடம் சொல்லி புலம்பி அழுது கொண்டிருந்தார்.
அப்பத்தா- ராஜாங்கம் இருவரும் தமிழ்- சேது இருவரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து மலரின் கையில் இருந்து ஒரு கண்ணாடி பாத்திரம் கீழே விழுகிறது. இதனால் அப்பத்தா கோபப்பட்டு திட்டினார். ஈஸ்வரி, இனி சேது தமிழுக்கு கஷ்ட காலம் தான் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் சக்தி, ஜெனியின் அப்பாவை சந்தித்து தன்னுடைய காதலை பற்றி பேசினார்.
சின்ன மருமகள்:
கோபத்தில் ஜெனியின் அப்பா, சக்தியை அடித்து விரட்டினார். பின் இதைப்பற்றி சக்தி, தமிழ்- சேது இருவருக்கும் போன் செய்து சொன்னார். பின் இதை பற்றி தமிழ்- சேது இருவருமே ராஜாங்கத்திடம் ஜெனியின் காதலுக்கு உதவி செய்ய கேட்டார்கள். ராஜாங்கம் தயங்கினார். ஈஸ்வரி, தேர்தல் சமயத்தில் இதெல்லாம் தேவையில்லை என்றார். இருந்தாலும் தமிழ்ச்செல்வி கேட்டுக் கொண்டதால் ராஜாங்கம் ஒத்துக்கொண்டார். பின் ஜெனியின் அப்பாவை சந்தித்து பேசுவதற்காக போன் செய்து ராஜாங்கம் வர சொன்னார். இன்னொரு பக்கம் தனம் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ஏளனமாக கிண்டலடித்து பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யா மோசமாக பேசியதால் தனம் வேதனைப்பட்டு இருக்கிறார்.. அப்போது வந்த மலரிடம் நடந்ததை எல்லாம் தனம் சொல்கிறார். பின் ஐஸ்வர்யாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தனம், மலர் இருவரும் சேர்ந்து திட்டம் போடுகிறார்கள். அதன்படி ஐஸ்வர்யா கீழே விழுகிறார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் இந்த பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும். முதலில் காமேசை பிச்சை எடுப்பதை நிறுத்த வேண்டும். அதற்கு நான் ஏதாவது செய்கிறேன் என்று சொல்கிறார். அப்போது காமேஸ் வருகிறார்.
சீரியல் ட்ராக்:
காமேசை அழைத்துக்கொண்டு தாமரை செல்கிறார். இன்னொரு பக்கம் தமிழுக்கு போன் செய்து ஜெனி, தனக்கு திருமண ஏற்பாடு செய்வது பற்றி சொல்லி அழுகிறார். தமிழ், சேது இருவருமே ஜெனிக்கு நம்பிக்கை கொடுக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் தமிழ்- சேது இருவரும் ராஜாங்கத்திடம் ஜெனியின் காதலை பற்றி பேச சொல்கிறார்கள். ராஜாங்கமும் ஜெனியின் அப்பாவிடம் பேச கிளம்புகிறார். ஆனால், சகுன தடையாக ராஜாங்கம் காலில் அடிபட்டு விடுகிறது. உடனே ராஜாங்கம் அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார். பிரச்சனை வருமோ என்று அப்பத்தா ரொம்பவே வருத்தப்படுகிறார்