விச பூச்சி கடியால் பாதிக்கப்பட்ட ராஜாங்கம் குடும்பம், தமிழ்-சேது என்ன செய்ய போகிறார்கள்? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஜெனி, நான் காதலிக்கும் விஷயம் வீட்டிற்கு தெரிந்து விட்டது. அதனால் தான் என் படிப்பை நிறுத்துகிறார்கள் என்று எமோஷனலாக சொல்லி அழுதார். அப்போது தமிழ்ச்செல்வி, எதனால் உங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார். அதற்கு ஜெனி, நானும் சக்தியும் வெவ்வேறு மதம், அதோட அவர் ஜாதியை தெரிந்து கொண்டு இந்த பிரச்சனை செய்கிறார்கள் என்றார். அந்த சமயம் பார்த்து தமிழில் மொபைலுக்கு சக்தி போன் செய்து ஜெனியிடம் பேசினார். தமிழ் செல்வி தன்னுடைய தோழிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
நேற்று எபிசோட்டில் மருத்துவ முகாமில் இருப்பவர்களுக்காக சாப்பாடு எடுத்து வரும் வண்டி ஒரு சின்ன விபத்தில் சிக்கிக் கொள்கிறது. இதனால் சரியான நேரத்தில் சாப்பாடு வரவில்லை என்று மருத்துவர்கள் எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது நடந்ததைப் பற்றி அறிந்த அப்பத்தா, நாங்களே சாப்பாட்டை உங்கள் எல்லோருக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார். பின் அப்பத்தா, சேது, மலர், கண்மணி எல்லோருமே சேர்ந்து சாப்பாடு செய்து மருத்துவ முகாமில் உள்ளவர்களெல்லாம் போட்டார்கள்.
சின்ன மருமகள்:
அதை பார்த்து தமிழ் செல்விக்கு சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருமே சேதுவை ரொம்ப பெருமையாக புகழ்ந்து பேசினார்கள். அந்த சமயம் பார்த்து மருத்துவ முகாமிற்கு ஒரு குழந்தையை ஆபத்தான கட்டத்தில் பெற்றோர் அழைத்து வந்தார்கள். அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் சரியான சிகிச்சை கொடுத்து காப்பாற்றி விட்டார்கள். இதனால் தமிழ்செல்வியின் காலில் விழுந்து நன்றி சொன்னார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம் தங்கும் வீட்டிற்கு வேலை ஆட்கள் வந்தார்கள். அவர்கள் எல்லா வசதியையும் ஏற்பாடு செய்து தந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு போஸ் அனுப்பிய ஆட்கள் வருகிறார்கள். ராஜாங்கத்தை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து மலைவாழ் கிராம மக்கள் ராஜாங்கத்தை பார்க்க வருகிறார்கள். அவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பொருட்களை எல்லாம் கொடுத்து தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை எல்லாம் சொல்கிறார்கள். அதோடு ஒரு விஷ வண்டுவால் தாங்கள் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். அதற்கு ராஜாங்கமும் நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து அந்த வண்டு ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு வருகிறது. மலைவாழ் மக்கள் எல்லோருமே பயந்து கொண்டு உள்ளே போங்க என்று கத்துகிறார்கள். இருந்தாலுமே ராஜாங்கத்தின் குடும்பத்தில் உள்ள எல்லோரும் மீதும் அந்த வண்டு கொட்டி விடுகிறது. ராஜாங்கத்தின் மனைவிக்கு மட்டும் ஒன்னும் ஆகவில்லை. எல்லோரும் வலி தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். பின் சேதுக்கு போன் செய்து தகவலை சொல்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.