அப்பத்தாவின் மோசமான நிலை, ராஜாங்கம் குடும்பத்தின் வேண்டுதல் நிறைவேறுமா? சின்ன மருமகள்

By subhashini · 22/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ் பிச்சை ஃபோன் எடுக்கவில்லை என்று தாமரை ரொம்பவே புலம்பி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரொம்பவே எமோஷனலாகி அழ ஆரம்பித்து விட்டார். அந்த சமயம் பார்த்து காமேஷ் பிச்சை ஃபோன் எடுத்து ஒரு மூட்டைக்குள் இருப்பதாக சொன்னார். பின் அந்த ரூமுக்குள் இருக்கும் முட்டையை திறந்தால் காமேஷ் பிச்சை இருந்தார். தாமரை சந்தோசப்படுகிறார். பின் இருவரும் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போட்டார்கள்.

சாவித்திரி, அதற்கு நேரமில்லை. இங்கே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். இன்னொரு பக்கம் தாமரையை அழைத்து வரச் சொல்லி மணமேடையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சேது, தமிழ்ச்செல்வி, கருப்பன் மூவருமே தாமரையின் ரூமுக்கு வெளியே நின்று அழைக்கிறார்கள். உள்ளே காமேஷ், தாமரை கழுத்தில் தாலியை கட்டி விட்டார். பின் அந்த இடத்திற்கு ராஜாங்கமும் வந்து தாமரையை அழைத்தார். என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் சாவித்திரி -தாமரை இருவரும் இருந்தார்கள்.

சின்ன மருமகள்:

ராஜாங்கம் காலில் விழுந்த சாவித்திரி, எங்களை மன்னித்து விடுங்கள். தெரியாமல் பண்ணிவிட்டோம். தயவு செய்து வாத்தியார் மாப்பிள்ளைக்கு என்னுடைய மகளை திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். பின் சாவித்ரி, மாப்பிள்ளை காலில் விழுந்து கெஞ்சி கதறுகிறார். தாமரையால் எதுவுமே பேச முடியவில்லை. உடைந்து போய் நிற்கிறார். அப்போது ராஜாங்கம், சாவித்திரி- தாமரை- அந்த பிச்சைக்காரனை தவிர எல்லோருமே வீட்டிற்கு கிளம்புங்கள். இனிமேல் அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

சீரியல் ட்ராக்:

அப்பத்தா, ராஜாங்கம் கொடுத்த நகை, புடவை எல்லாம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். சாவித்திரி, எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை. மாப்பிள்ளை வீட்டிலும் கிளம்பி விட்டார்கள். பின் வீட்டில் இதுதான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, ஒன்னுக்கு ரெண்டாக தாமரை- சாவித்திரி பற்றி ஏத்தி விட்டுக் கொண்டிருந்தார். எல்லோருமே ராஜாங்கத்திற்கு போன் செய்து திருமணத்தைப் பற்றி விசாரிப்பதால் அவர் பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி, கோபத்தில் போலீசுக்கு போன் செய்து காமேஷ் மீது புகார் கொடுத்தார். கோவிலுக்கு வந்த போலீஸ், காமேஷ் பிச்சையை பார்த்தவுடன் சகஜமாக பேசி இருந்தார்கள். இது எல்லாம் பார்த்து சாவித்திரிக்கு பயங்கர கோபம் வந்தது.

https://www.youtube.com/watch?v=9xHvBUGd2g8

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ராஜாங்கம் குடும்பத்தினர் தமிழ்ச்செல்வியை பற்றி கண்ட கனவை சாமியாரிடம் சொல்கிறார்கள். அதற்கு அந்த சாமியார், சூரிய கிரகணம் முடிவதற்குள் முருகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லோருமே காவடி எடுத்தால் அந்த பிரச்சனை தீரும் என்கிறார். பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள மொத்த பேருமே காவடி எடுக்கிறார்கள். அப்போது அப்பத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. வீட்டில் எல்லோருமே பதறுகிறார்கள்

behindtalkies AMP · Quick view
View full