மருத்துவ கேம்பில் ராஜாங்கம் குடும்பம், போஸ் செய்த சதி வேலை - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி, விவாகரத்து என்பது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இதற்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை. எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து என்னுடைய கல்விக்கு என்னுடைய மாமனார் பெரும் உதவியாக இருந்தார். அந்த மாதிரி தான் இவர் இதையும் செய்தார். மற்றபடி நீங்கள் சொல்வது போல் விளம்பரத்திற்காக அவர் செய்யவில்லை. என்னுடைய குடும்பம் எனக்கு துணையாக தான் இருக்கிறது என்றார். அதற்குப்பின் சேது, தமிழ்ச்செல்வி, ராஜாங்கம் எல்லோருமே வீட்டுக்கு வந்து விட்டார்கள்.
அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, கேம்ப் போகும் விஷயமாக ராஜாங்கத்திடம் சொன்னார். பின் அவர், சேதுவை அழைத்து போக சொன்னார். அந்த சமயம் பார்த்து போன் செய்த கட்சி தலைவரின் மனைவி, மருத்துவ கேம்பிற்கு ராஜாங்கத்தையும் போக சொன்னார். அதனால் அவர் ஒத்துக் கொண்டார். பின் குடும்பத்துடன் எல்லோருமே கேம்புக்கு செல்ல தயாராகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் மெடிக்கல் ஷாப் போகணும் என்பதால் தமிழ்ச்செல்வியின் தங்கை சேது விடம் உதவி கேட்டார். ஆனால், அவர் கோபத்தில் கத்தினார்.
சின்ன மருமகள்:
நேற்று எபிசோட்டில் தமிழின் தங்கை, நான் உங்களை மாமாவாக தான் நினைக்கிறேன். உங்களுக்கும் இருக்கும் பிரச்சனைக்கு எனக்கு தெரியாது என்றார். இதனால் மனம் மாறிய சேது, தமிழின் தங்கைக்கு உதவினார். அதற்குப்பின் எல்லோரும் கேம்ப் போகும் விஷயத்தைப் பற்றி தாமரையும் அவருடைய அம்மாவும் ஈஸ்வரிடம் சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஈஸ்வரி, அவருடைய மகளும் கேம்ப் போவதற்காக தயாராகினார்கள்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ஆறுமுகம் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த கண்மணி கோபப்பட்டு சண்டை போட்டார். அதற்கு ஆறுமுகம், நண்பர்கள் பார்ட்டி கேட்டார்கள் கொடுத்தேன். அப்படித்தான் குடித்துவிட்டு வருவேன். அதை நீ பழகிக்கொள் என்று திமிராக பேசி இருந்தார். இதை பார்த்து கண்மணிக்கு கோபம் தான் வந்தது. மறுநாள் காலையில் மருத்துவ முகாமிற்கு ராஜங்கம் குடும்பத்தில் எல்லோருமே கிளம்பினார்கள். ஆனால், ஆறுமுகம் மட்டும் போகவில்லை. ஈஸ்வரியும் அவருடைய மகளுமே கிளம்பினார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மருத்துவ முகாம் நடக்கும் மழை கிராமத்திற்கு ராஜாங்கம் குடும்பத்தில் சென்று விட்டார்கள். அங்கு மருத்துவ முகாமை பற்றி ராஜாங்கம் நிறைய விஷயங்களை சொல்கிறார். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தின் எதிரி, போஸ் உடன் சேர்ந்து ராஜாங்கத்தை அழிக்க திட்டம் போடுகிறார்.
அதற்குப்பின் மருத்துவ முகாமில் ராஜங்கம் குடும்பத்தில் உள்ள எல்லோருமே ரத்த தானம் செய்கிறார்கள். தாமரை, ஈஸ்வரிக்கு விருப்பமில்லை என்றாலும் ரத்த தானம் கொடுக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.