ஆபத்தான நிலையில் போராடும் ராஜாங்கம் குடும்பம், சேது- தமிழ் என்ன செய்ய போகிறார்கள்? சின்ன மருமகள்

By subhashini · 28/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மருத்துவ முகாமில் இருப்பவர்களுக்காக சாப்பாடு எடுத்து வரும் வண்டி ஒரு சின்ன விபத்தில் சிக்கிக் கொள்கிறது. இதனால் சரியான நேரத்தில் சாப்பாடு வரவில்லை என்று மருத்துவர்கள் எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது நடந்ததைப் பற்றி அறிந்த அப்பத்தா, நாங்களே சாப்பாட்டை உங்கள் எல்லோருக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார். பின் அப்பத்தா, சேது, மலர், கண்மணி எல்லோருமே சேர்ந்து சாப்பாடு செய்து மருத்துவ முகாமில் உள்ளவர்களெல்லாம் போட்டார்கள்.

அதை பார்த்து தமிழ் செல்விக்கு சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருமே சேதுவை ரொம்ப பெருமையாக புகழ்ந்து பேசினார்கள். அந்த சமயம் பார்த்து மருத்துவ முகாமிற்கு ஒரு குழந்தையை ஆபத்தான கட்டத்தில் பெற்றோர் அழைத்து வந்தார்கள். அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் சரியான சிகிச்சை கொடுத்து காப்பாற்றி விட்டார்கள். இதனால் தமிழ்செல்வியின் காலில் விழுந்து நன்றி சொன்னார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம் தங்கும் வீட்டிற்கு வேலை ஆட்கள் வந்தார்கள். அவர்கள் எல்லா வசதியையும் ஏற்பாடு செய்து தந்தார்கள்.

சின்ன மருமகள்:

ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு போஸ் அனுப்பிய ஆட்கள் வந்தார்கள். ராஜாங்கத்தை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்கள். அந்த சமயம் பார்த்து மலைவாழ் கிராம மக்கள் ராஜாங்கத்தை பார்க்க வந்தார்கள். அவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பொருட்களை எல்லாம் கொடுத்து தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை எல்லாம் சொன்னார்கள். அதோடு ஒரு விஷ வண்டுவால் தாங்கள் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை சொன்னார்கள். அதற்கு ராஜாங்கமும் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து அந்த வண்டு ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு வந்தது. மலைவாழ் மக்கள் எல்லோருமே பயந்து கொண்டு உள்ளே போங்க என்று கத்தினார்கள். இருந்தாலுமே ராஜாங்கத்தின் குடும்பத்தில் உள்ள எல்லோரும் மீதும் அந்த வண்டு கொட்டி விடுகிறது. ராஜாங்கத்தின் மனைவிக்கு மட்டும் ஒன்னும் ஆகவில்லை. எல்லோரும் வலி தாங்க முடியாமல் தவித்தார்கள். பின் சேதுக்கு போன் செய்து தகவலை சொன்னார்கள்.

https://www.youtube.com/watch?v=D9R-WVUTgHM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராஜாங்கம் குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே அந்த விஷப்பூச்சி கொத்தி விடுவதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம் அறிந்து தமிழ்- சேது இருவருமே வருகிறார்கள். பின் அவர்களை காப்பாற்ற மலைவாழ் மக்கள் சொன்ன இடத்திற்கு சேது-தமிழ் இருவருமே செல்கிறார்கள். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full