மன்னிப்பு கேட்ட அப்பத்தா, வேதனையில் எமோஷனலாக பேசும் ராஜாங்கம், சேது - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வியின் அம்மா, அப்பா, தங்கை எல்லோருமே வந்திருந்தார்கள். இதை பார்த்த சேது, தாமரையின் அம்மா, ஈஸ்வரி மூவருமே கோபப்பட்டு சண்டைக்கு போனார்கள். உடனே தமிழ்ச்செல்வி, எனக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. அதுவரையும் நானும் இந்த வீட்டு மருமகள் தான். என் அம்மா, அப்பா அப்பத்தாவின் கடைசி சடங்கிற்கு வந்திருந்தார்கள். நீங்கள் யாரும் தவறு செய்யவில்லையா? என்றெல்லாம் வாக்குவாதம் செய்தார். இதையெல்லாம் கேட்டு ராஜாங்கம் அமைதியாக இருந்தார்.
தமிழ், தன்னுடைய அம்மா அப்பாவிற்காக சப்போர்ட் செய்து பேசுவதால் சேதுவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் அங்குள்ளவர்கள் தமிழின் அம்மா, அப்பாவை அப்பத்தாவிற்கு மரியாதை செலுத்த சொன்னார்கள். அப்போது அப்பத்தா, கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை அவருடைய மருமகள் எடுத்துக் கொண்டு வந்து ராஜாங்கத்திடம் கொடுத்தார். அதில் சேது, தமிழ் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். தமிழ் செய்த தவறை மன்னித்து சேது ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் எனக்கு ஒரே குறை. ராஜாங்கம் இதை நடத்தி வைக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி இருந்தார். இதை கேட்டவுடன் தமிழ்-சேது இருவருமே ஷாக் ஆனார்கள்.
சின்ன மருமகள் சீரியல்:
தாமரை அம்மா, இந்த கடிதத்தை எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. தமிழ் செய்த துரோகத்தை எல்லாம் மன்னிக்க முடியாது என்றெல்லாம் கத்தினார். உடனே ஈஸ்வரி, சேது- தமிழ் இருவருக்குமே சேர்ந்து வாழ விருப்பமில்லை. எதற்கு தேவையில்லாமல் இப்படி எல்லாம் செய்கிறீர்கள். என்று கோபம் வருமாறு பேசிக் கொண்டிருந்தார். உடனே சேது- தமிழ் இருவருமே சேர்ந்து வாழ முடியாது என்று சொன்னார்கள். பின் தமிழின் அம்மா, இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணம் நான் தான். என் மகளின் உயிரை காப்பாற்ற பொய் சொன்னேன். இதற்கும் என் மகளுக்கும் சம்பந்தமில்லை என்று எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு அழுதார். பின் ராஜாங்கம், அப்பத்தாவிற்காக இந்த முடிவு எடுத்து தான் ஆக வேண்டும். நீங்கள் இருவருமே சேர்ந்து பேசி முடிவெடுங்கள் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் ஒரு வழியாக மனம் மாறி சேது- தமிழ் இருவருமே சேர்ந்து வாழ்வதாக அப்பத்தா முன்பு உறுதிமொழி எடுத்தார்கள். அந்த சமயம் பார்த்து அப்பத்தா தும்பி விட்டார். அப்பத்தா இறக்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரிகிறது. அதோடு இது அப்பத்தா நாடகம் என்பதையும் புரிந்துகொண்டு மொத்த வீடுமே கோபப்பட்டார்கள். அப்போது சேது, நான் இவளுடன் சேர்ந்து வாழவே மாட்டேன் என்று திட்டினார். தமிழ் செல்வி, நான் என் தன்மானத்தை இழந்து சேர்ந்து வாழ முடியாது என்று சொன்னார். பின் இருவருமே அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே அப்பத்தா செய்த வேலையை பார்த்து திட்டி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மொத்த குடும்பமும் அப்பத்தா செய்த வேலையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். தாமரையின் அம்மா, ஈஸ்வரி எல்லோருமே அப்பத்தாவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உடனே ராஜாங்கம், அம்மா செய்தது தவறுதான். இருந்தாலுமே அவர் குடும்ப நலனுக்காக தான் செய்தார். தயவு செய்து இதைப் பற்றி இனிமேல் யாரும் பேச வேண்டாம் என்று சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு தாமதமாக சென்றதால் ஆசிரியர் திட்டி வார்னிங் கொடுக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் அப்பத்தாவிடம் தாமரை அம்மா, ஈஸ்வரி இருவருமே பேசுகிறார்கள். அப்போது அப்பத்தா, நான் உங்களுக்கு பணம், நகை தருகிறேன் என்று சொன்னேனா? என்று இருவரையுமே வெளுத்து வாங்குகிறார். அதற்குப்பின் அப்பத்தாவிடம் சேது- ராஜாங்கம் இருவருமே பேசுகிறார்கள். அப்போது ராஜாங்கம், நீ குடும்ப ஒற்றுமைக்காக தான் இப்படி எல்லாம் செய்தாய் அம்மா. நீ செய்ததை நினைத்து எனக்கு வருத்தம் இல்லை என்று சொல்கிறார். சேதுவுமே தன்னுடைய பாட்டியிடம் ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது