கனவை நினைத்து பயந்து போகும் ராஜாங்கம், அதிர்ச்சியில் உறைந்த தாமரை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் வீட்டிற்கு வந்த தலைவர் வளைகாப்பு விழாவை சிறப்பாக தொடங்கி வைத்தார். ராஜாங்கம் வீடு சந்தோஷமாக இருக்கிறது. பின் ஏழைப் பெண்களுக்கு ராஜாங்கம், ரெண்டு பவுன் தங்கம் செயின், 50,000 ரூபாய் பணமும் கொடுத்தார். விழா சிறப்பாக முடிந்தவுடன் கட்சியின் தலைவர், தேர்தல் வர இருப்பதால் ராஜாங்கம் குடும்பம் கவனமாக இருக்க வேண்டும். எதிர்கட்சிகள் நிறைய சூழ்ச்சிகள் செய்வார்கள். அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் அறிவுரை சொன்னார்.
தமிழ்ச்செல்வி தான் கண்ட கனவை பற்றி தன் அம்மாவிடம் சொன்னார். அதைக் கேட்ட தமிழ்செல்வியின் அம்மாவும் சாக் ஆனார். காரணம், அவருக்குமே இதே மாதிரி கனவு வந்திருந்தது. இன்னொரு பக்கம் சேது- அப்பத்தா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சேது இரட்டை குழந்தை பற்றி வீட்டில் சொல்லிவிடலாம் என்றார். உடனே அப்பத்தா, சாமியிடம் உத்தரவு கேட்கலாம். கடவுள் ஒத்துக் கொண்டால் சொல்லிவிடலாம் என்றார் பின் சேது, சீட்டில் சொல்லலாம், சொல்ல வேண்டாம் என்று எழுதி போட்டார்.
சின்ன மருமகள்:
அதில் சொல்லக்கூடாது என்பதுதான் வந்தது. இதனால் இருவரும் வீட்டில் உண்மையை மறைத்தார்கள். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து தலைவர் சொன்னது போல எந்த பிரச்சனையிலும் வம்பிழும் மாட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். குறிப்பாக ஈஸ்வரி, சாவித்திரி இருவருக்கும் வார்னிங் கொடுத்தார். அதற்குப் பின் சேது, தமிழ் இருவரும் சந்தோஷமாக தங்களுடைய ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்- சேது வளைகாப்பு சிறப்பாக முடிந்ததால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம், தமிழை சேது வீட்டை விட்டு வெளியே துரத்துவது போல கனவு காண்கிறார். பின்னர் அதிர்ச்சியாகி எழுந்த ராஜாங்கம் ரொம்பவே அந்த கனவை நினைத்து பயப்படுகிறார். ஆனால், ராஜாங்கம் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. அதற்குப்பின் தமிழை பார்த்து பார்த்து எல்லோரும் கவனித்துக் கொள்கிறார்கள். இதை பார்த்து ராஜாங்கத்திற்கு சந்தோஷமாக
இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் காமேஷ் பிச்சையை சந்திப்பதற்காக சாவித்திரி- தாமரை இருவரும் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு காமேஷ் பிச்சை, தாமரையை காதலிப்பதாக ஒத்துக் கொள்கிறார். இதனால் சாவித்திரி ரொம்பவே சந்தோசப்படுகிறார். அந்த சமயம் பார்த்து சாவித்திரிக்கு போன் செய்த ஈஸ்வரி, வீட்டிற்கு வர சொல்கிறார். வீட்டில் ராஜாங்கம் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கிறார்கள். சீக்கிரமாகவே கல்யாணத்தை வைத்து விடலாம் என்று பேசுகிறார்கள். சாவித்திரி- தாமரை இருவரும் கல்யாணத்தை தடுக்க நினைக்கிறார்கள். ஆனால், ராஜாங்கம் எல்லா முடிவும் எடுத்து விடுகிறார்.