ஈஸ்வரி, சாவித்ரியை வெளுத்து வாங்கும் ராஜாங்கம், வேதனையில் தமிழ்செல்வி - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் குடும்பத்தினர் அன்பாக வரவேற்று கவனித்தார்கள். பின் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ராஜாங்கம், கார்- தங்க காசுகளை பரிசாக கொடுத்தார். பின் இதை தமிழ்ச்செல்வி- சேது பெயரில் கொடுக்க சொன்னார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்தார்கள். நடன கலைஞர்களை வீட்டிற்கு வரவைத்து ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டம் என்று ராஜாங்கம் வீடு களைகட்டி இருக்கிறது.
அப்போது கருப்பன், தமிழ் மனதில் காதல் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வதற்கு நீ அவர்களுடன் சேர்ந்து நடனமாடு. தமிழ் கோபப்பட்டால் அவர் உன்னை காதலிக்கிறார் என்று அர்த்தம் என்று சொன்னார். பின் சேதுவின் அண்ணன் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததால் சேது பயங்கரமாக அந்த நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இதை பார்த்து தமிழ் கோபப்பட்டு உள்ளே சென்று விட்டார். இதை பார்த்து சேதுவிற்கு சந்தோஷமாக இருந்தது.
சின்ன மருமகள்:
பின் சேது, உன் மனதில் காதல் இருப்பது எனக்கு தெரிந்து விட்டது என்றெல்லாம் போதையில் உளறினார். இதை அறிந்த தமிழ்செல்வி, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் குடித்துவிட்டு ஆடுவது எனக்கு என்ன புதிதா? நீங்கள் என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை என்று சென்று விட்டார். அதற்குப்பின் மலைவாழ் கிராமத்தில் இருந்து சில பேர் ராஜாங்கம் வீட்டிற்கு வந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். அப்போது ஈஸ்வரி, அந்த சாமியாடி பெண்ணை பார்த்து உங்களிடம் கேள்வி கேட்கணும் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, மூப்புத்தாய் சொன்னதையே நினைத்து பார்க்கிறார். தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்பதை சேது முழுமையாக உணர்ந்து விடுகிறார். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைக்கிறார். பின் ஈஸ்வரி, சாவித்ரி இடம் ராஜாங்கம், இனிமேல் நீங்கள் இருவரும் சேது- தமிழ் விஷயத்தில் தலையிடக்கூடாது. அவர்களுக்கு மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்றெல்லாம் எச்சரிக்கிறார். ஈஸ்வரி, சாவித்திரியால் எதுவுமே பேச முடியவில்லை.. ராஜாங்கம் ரொம்பவே கடுமையாக பேசி விடுகிறார். அதற்குப்பின் சேது- தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது தமிழ், பொது வெளியில் தன்னை அசிங்கப்படுத்தியதை சொல்லி ரொம்பவே வருத்தப்படுகிறார்.
இன்னொரு பக்கம் தாமரை- சாவித்திரி, சித்ரா-ஈஸ்வரி நான்கு பேருமே தமிழ்செல்வி முன்பு ராஜாங்கம் தங்களை அவமானப்படுத்தியது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதோடு தமிழ்செல்வியை வீட்டை விட்டு அனுப்ப மீண்டும் சதி திட்டம் போடுகிறார்கள். கடைசியில் போஸ் செங்கல் சூலையில் வேலை செய்யும் பெண்ணை கரெக்ட் செய்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது