கோயிலில் காமேஷை புரட்டி எடுக்கும் தாமரை, தமிழின் ஆசை நிறைவேற்றும் ராஜாங்கம் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், என்ன கோலம் என்று கேட்கிறார்? சேது, தமிழுக்காக இதையெல்லாம் செய்கிறேன் என்றார். ராஜாங்கத்தால் எதுவுமே பேச முடியவில்லை. பின் தமிழ்ச்செல்விக்காக அன்று முழுவதுமே தண்ணீர் பலத்தைக் கட்டிக் கொண்டு சேது எல்லா இடத்திற்கும் சென்றார். பின் இதை அறிந்த தமிழ்ச்செல்வி, தன் கணவர் தனக்காக செய்த விஷயத்தை எல்லாம் நினைத்து ரொம்பவே எமோஷனலாக ஃபீல் பண்ணுகிறார்.
தமிழ்ச்செல்வி, எனக்கு மண்வாசனை ரொம்ப பிடிக்கும். அந்த வாசனை பிடிக்க வேண்டும் என்று கேட்டார். உடனே எல்லோரும் எப்படி முடியும் என்று கேட்டார்கள். உடனே சேது, லாரி டேங்கில் இருந்து மழை பெய்வது போல தண்ணீரை ஊற்ற வைத்தார். அந்த தண்ணீர் மண்ணில் படுவதால் மண்வாசனை வருகிறது. உடனே தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்பட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே மழையில் சந்தோசமாக ஆடிப்பாடி விளையாடினார்கள். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பானது.
சின்ன மருமகள்:
அதற்குப்பின் ராஜாங்கம், வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வி, நான் இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து பெண்கள்தான் சமைக்கிறார்கள். இன்று ஒரு நாளைக்கு பெண்களுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும். ஆண்கள் தான் சமைக்க வேண்டும் என்றார். இதை கேட்டவுடன் ஈஸ்வரி திட்டினார். ராஜாங்கமும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சேது, பிரச்சனை ஏதாவது வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். உடனே ராஜாங்கம், இது தான் உன்னுடைய ஆசை. நாங்கள் எல்லோரும் சமைக்கிறோம். பெண்கள் எல்லோருமே ரெஸ்ட் எடுங்கள் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காமேஷ், தாமரை- சாவித்திரியின் புகைப்படத்தை வைத்து பிச்சை எடுப்பதை ஒருவர் தாமரிடம் சொல்லி விடுகிறார். இதை அறிந்த தாமரை கோபத்தில் கொந்தளித்து காமேஷிடம் சண்டைக்கு போகிறார். பின் கோயில் என்று கூட பார்க்காமல் அந்த இடத்திலேயே தாமரை, காமேஷை புரட்டி எடுக்கிறார். இன்னொரு பக்கம் கிச்சனில் ராஜாங்கம், சேது, கருப்பு எல்லா ஆண்களுமே சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து வீட்டில் உள்ள எல்லா பெண்களும் சந்தோஷப்படுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து சமைக்கிறோம் என்ற பெயரில் எல்லோருமே கிச்சனை துவம்சம் செய்து வைக்கிறார்கள். அதற்குப்பின் ஒரு வழியாக சமைத்த சாப்பாடுகளை எல்லா பெண்களுக்கும் அமர வைத்து பரிமாறுகிறார்கள். பெண்களுமே முதலில் சாப்பாடு நன்றாக இல்லாதது போல் நடிக்கிறார்கள். பின் எல்லோருமே சாப்பாடு அருமையாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். எல்லா ஆண்களும் ரொம்ப சந்தோசப்படுகிறார்கள்.