ஜெனியின் வாக்குமூலத்தால் கைது செய்யப்பட்ட ராஜாங்கம், உடைந்து போகும் சேது - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஜெனியின் அப்பா தாமஸ், உங்களால் என்னை கட்சியில் இருந்து விலக்கி விட்டார்கள். எனக்கான போஸ்டிங்கும் கொடுக்கவில்லை என்றார். ராஜாங்கம் தன்னுடைய கட்சியில் சேர்த்துக் கொள்வதாக அறிவித்து விட்டார். அதற்குப் பின் தாமஸ், தன்னுடைய அடியாட்களை வைத்து சக்தியை அடித்து இழுத்து சென்றார். ஜெனி எவ்வளவோ கெஞ்சி கேட்கிறார். ஆனால், தாமஸ் கேட்கவில்லை. ஜெனி, தமிழிடம் நடந்ததை சொல்ல போன் செய்தார். அதற்குள் ஜெனி அம்மா போனை பிடுங்கி விட்டார்.
தாமஸ், ராஜாங்கத்தை தன் வலையில் சிக்க வைப்பதற்கு வரவேற்கிறார். தாமஸ், நல்லவன் போலவே தாமஸ் பேசிவிட்டு சரக்கு அடிக்கலாம் என்றெல்லாம் கேட்டார். ராஜாங்கம் கோபத்தில் ராஜாங்கத்தை திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்கு பின் அதே இடத்திற்கு சக்தியை கட்டிப்போட்ட நிலையில் தாமஸ் அடியாட்கள் வைத்திருந்தார்கள். தாமஸ், சக்தியின் கதையை முடித்து விட சொன்னார். சக்தியை அடியாட்கள் அருவாளால் வெட்டி கொன்று விட்டார்கள்.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் சேது தன் அப்பாவின் நிலமையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதன்பின் ஈஸ்வரி, ராஜாங்கத்திற்கு எதிரியிடம் போன் செய்து அவரை பழிவாங்க எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் ராஜாங்கத்தை விருது விழாவிற்கு வர சொன்னார்கள். ராஜாங்கம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. கட்டாயப்படுத்தினால் ராஜாங்கம் ஒத்துக் கொண்டார் பின் டிவி, நியூஸ் சேனல் என அனைத்திலும் சக்தி கொலை செய்யப்பட்டு இருக்கும் செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இறந்து போனது சக்தி தான் என்பது தெள்ளத்தெளிவாகி விடுகிறது. உடனே தாமஸின் வீட்டிற்கு போலீஸ் வருகிறார்கள். அப்போது ஜெனி, சக்தி எங்கே? என்ன ஆனது? என்று விசாரிக்கிறார். போலீஸ் நடந்ததை எல்லாம் சொல்கிறார்கள். அதிர்ச்சியில் ஜெனி கத்துகிறார். இதற்கெல்லாம் காரணம் என்னுடைய அப்பா தான் என்று சொல்கிறார். போலீஸ், தாமசை கைது செய்து செல்கிறார்கள். இன்னொரு பக்கம் விருது வழங்கும் விழாவில் ராஜாங்கத்தை ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜாங்கத்திற்கு விருது கொடுக்க வரும் போது போலீஸ் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
ராஜாங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. போலீஸ், சக்தியை கொலை செய்த வழக்கில் தாமஸ், உங்களையும் கைது செய்கிறோம். அந்த கொலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தாமஸ் சொல்லி இருக்கிறார். அதனால் விசாரணைக்கு நீங்கள் வரவேண்டும் என்கிறார். பின் போலீசுடன் கிளம்பி செல்கிறார் ராஜாங்கம். பின் போலீஸ் ஸ்டேஷனில் ஜெனி, சக்தியை கொன்றது என்னுடைய அப்பாவும் அமைச்சர் ராஜாங்கம் தான். அவர்கள் இருவரையும் சும்மா விடாதீர்கள் என்று உண்மை அறியாமல் ஜெனி கூறிக் கொண்டிருக்கிறார். ஜெனி அளித்த பேட்டி எல்லாம் டிவியில் வருகிறது. அதை பார்த்து ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே கதறி அழுகிறார்கள்.