சேது- தமிழ் விவகாரம்: சேர்த்து வைக்கப் போராடும் அப்பத்தா, ராஜாங்கம் சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வி கோபப்பட்டு சேதுவிடும் சண்டை போனார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, இனிமேல் நாங்கள் சேர்ந்து வாழ்வது நடக்காத விஷயம். தயவுசெய்து இதை விடுங்கள் அப்பத்தா என்று சொல்லிவிட்டு கிளப்பினார். பின் இருவருமே தூங்க போய் விட்டார்கள். அதற்கு பின் கருப்பு, தமிழையும் சேதுவையும் சேர்த்து வைக்கணும் என்றால் நீ செத்த பிறகு தான் நடக்கும் என்று சொன்னார். இதைக் கேட்ட அப்பத்தா, நான் செத்தால் நடக்குமா? அப்போ நாளை என்ன செய்கிறேன் பார் என்று உயில் கடிதம் எழுதினார்.
அப்பத்தா, எவ்வளவு எடுத்து சொல்லியுமே தமிழ்-சேது இருவருமே சேர்ந்து வாழ்வதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் மறுநாள் காலையில் அப்பத்தா எழவே இல்லை. அப்பத்தா இறந்து விட்டதாக மொத்த குடும்பமே உடைந்து விட்டது. அப்பத்தா உயிரிடம் இருக்கும் போது தான் எப்படியெல்லாம் அடக்கம் செய்ய வேண்டும், எப்படி எல்லாம் தன்னுடைய ஊர்வலம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பார். அதையெல்லாம் நினைத்து பார்த்து சேது, ராஜாங்கம் எல்லோருமே கதறி அழுதார்கள் ஆனால், உண்மையில் அப்பத்தா இறக்கவில்லை.
சின்ன மருமகள் சீரியல்:
அப்பத்தா இறந்துவிட்டார் என்று தாமரையின் அம்மா, என் மகளுக்கு 200 பவுன் நகை, ஒரு கோடி வரதட்சனை, ஒரு பங்களா தருகிறேன் என்று சொன்னீர்களே என்று இதுதான் சந்தர்ப்பம் என்று தனக்கு தேவையானதை எல்லாம் அப்பத்தா சொன்னது போல சொன்னார். இதைக் கேட்ட ஈஸ்வரி அவருடைய பங்கிற்கும் சொத்துக்களை கேட்டார். இதையெல்லாம் பார்த்து ராஜாங்கம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். ஈஸ்வரி, தாமரை, இருவரின் மகள்களும் சேர்ந்து அப்பத்தா சொத்து கேட்டு மாத்தி மாத்தி உலுக்கி எடுத்தார்கள். அப்பத்தாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வியின் அம்மா, அப்பா, தங்கை எல்லோருமே வந்திருந்தார்கள். இதை பார்த்த சேது, தாமரையின் அம்மா, ஈஸ்வரி மூவருமே கோபப்பட்டு சண்டைக்கு போனார்கள். உடனே தமிழ்ச்செல்வி, எனக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. அதுவரையும் நானும் இந்த வீட்டு மருமகள் தான். என் அம்மா, அப்பா அப்பத்தாவின் கடைசி சடங்கிற்கு வந்திருந்தார்கள். நீங்கள் யாரும் தவறு செய்யவில்லையா? என்றெல்லாம் வாக்குவாதம் செய்தார். இதையெல்லாம் கேட்டு ராஜாங்கம் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தமிழ், தன்னுடைய அம்மா அப்பாவிற்காக சப்போர்ட் செய்து பேசுவதால் சேதுவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் அங்குள்ளவர்கள் தமிழின் அம்மா, அப்பாவை அப்பத்தாவிற்கு மரியாதை செலுத்த சொன்னார்கள். அப்போது அப்பத்தா, கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை அவருடைய மருமகள் எடுத்துக் கொண்டு வந்து ராஜாங்கத்திடம் கொடுத்தார். அதில் சேது, தமிழ் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். தமிழ் செய்த தவறை மன்னித்து சேது ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் எனக்கு ஒரே குறை. ராஜாங்கம் இதை நடத்தி வைக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி இருந்தார். இதை கேட்டவுடன் தமிழ்-சேது இருவருமே ஷாக் ஆனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தாமரை அம்மா, இந்த கடிதத்தை எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. தமிழ் செய்த துரோகத்தை எல்லாம் மன்னிக்க முடியாது என்றெல்லாம் கத்துகிறார். உடனே ஈஸ்வரி, சேது- தமிழ் இருவருக்குமே சேர்ந்து வாழ விருப்பமில்லை. எதற்கு தேவையில்லாமல் இப்படி எல்லாம் செய்கிறீர்கள். என்று கோபம் வருமாறு பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து அப்பத்தாவிற்கு கோபம் தான் வருகிறது. உடனே சேது- தமிழ் இருவருமே சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். பின் தமிழின் அம்மா, இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணம் நான் தான். என் மகளின் உயிரை காப்பாற்ற பொய் சொன்னேன். இதற்கும் என் மகளுக்கும் சம்பந்தமில்லை என்று எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு அழுகிறார். பின் ராஜாங்கம், அப்பத்தாவிற்காக இந்த முடிவு எடுத்து தான் ஆக வேண்டும். நீங்கள் இருவருமே சேர்ந்து பேசி முடிவெடுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.