அடுத்தடுத்து வெளிவந்த உண்மைகள், கண்மணி வாழ்க்கையில் ராஜாங்கம் எடுத்த முடிவு - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கருப்பு, தாமரை இருவருமே மண்டபத்திற்கு அவசர அவசரமாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் கல்யாண பெண் காணவில்லை என்று மண்டபத்தில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜாங்கத்திற்கு போன் செய்தவர் ஆறுமுகம், கண்மணிக்கு திருமணம் நடந்து விட்டது. அதை நடத்தி வைத்ததே தமிழ்ச்செல்வி தான் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் கொந்தளித்த சேது, தமிழ்செல்வியை வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனே இது தான் சந்தர்ப்பம் என்று தாமரையின் அம்மாவும், ஈஸ்வரியும் தமிழை பற்றி ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த சமயம் பார்த்து தமிழ்செல்வி, கண்மணி- ஆறுமுகத்தை அழைத்து வந்தார். இதனால் மண்டபத்தில் உள்ள எல்லோருமே தமிழ்செல்வியை திட்டிக் கொண்டிருக்க, கோபத்தில் சேது, தமிழை அடிக்கப் போனார். உடனே தடுத்து நிறுத்திய கண்மணி, எனக்கு கல்யாணம் நடக்கவே இல்லை. நான் ஆறுமுகத்தை காதலிக்கிறேன். எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை. இருந்தாலும் என்னுடைய சம்மதம் கேட்காமல் முடிவு செய்துவிட்டார்கள். இதை பற்றி அண்ணியிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் எதுவுமே செய்ய முடியவில்லை என்று நடந்ததை சொல்லி அழுதார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகி நிற்கிறது.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் கண்மணி, ஆறுமுகத்தை தான் திருமணம் செய்து கொள்வேன். அண்ணி நம்பிக்கை கொடுத்து அழைத்து வந்ததால் தான் இங்கு வந்தேன். நாங்கள் கல்யாணம் செய்ய போனதற்கும் அண்ணிக்கும் சம்மந்தமே இல்லை என்று சொன்னார். இதை கேட்டு சேது அமைதியாகி விட்டார். பின் கோபத்தில் ஈஸ்வரியின் கணவர், ஆறுமுகத்தை அடித்து வெளியே துரத்தி விட்டார். கண்மணி எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை. பின் சேது, கண்மணிக்காக சப்போர்ட் செய்து பேசி இருந்தார். ஆனால், ஈஸ்வரி ஒத்துக் கொள்ளவே இல்லை.
நேற்று எபிசோட்:
ராஜாங்கம் மாப்பிள்ளை வீட்டில் பேசி மாப்பிள்ளையை மணமேடைக்கு போக சொன்னார். உடனே தமிழ் செல்வி, மாப்பிள்ளை நல்லவனே கிடையாது. இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்று சொன்னார். கோபத்தில் ஈஸ்வரி, தமிழ்செல்வியை திட்டி வெளியில் போக சொன்னார். அதற்குப்பின் தாமரையின் அம்மா, கருப்பு- தாமரை இருவருமே வந்து கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை பற்றி அவர்கள் ஏதோ சொல்ல வேண்டுமாம். அதுவரை கல்யாணத்தை நடத்த வேண்டாம் என்றார்கள். இதைக் கேட்டு ராஜாங்கத்திற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி என்னென்னவோ டிராமா செய்து திருமணத்தை நடத்த பார்க்கிறார். ஆனால், ராஜாங்கம் ஒத்துக்கொள்ளவில்லை. உடனே நந்தகுமார், எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. குறை இருக்கும் பெண்ணை கட்டிக்கொள்ளனும் என்று எனக்கு அவசியமில்லை என ரொம்ப மோசமாக கண்மணியை பேசுகிறார். அதனால் கோபப்பட்டு சேது, நந்தகுமாரை அடித்து விடுகிறார். அதற்குப்பின் மண்டபத்திற்கு கருப்பு, தாமரை இருவருமே வந்துவிடுகிறார்கள். அப்போது கருப்பு- தாமரை இருவருமே நடந்த எல்லாத்தையும் சொல்கிறார்கள். இதை கேட்டு ராஜாங்கம் குடும்பம் அதிர்ச்சி அடைகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
மண்டபத்திற்கு வந்த போலீஸ், நந்தகுமாரையும் அவருடைய குடும்பத்தையும் கைது செய்கிறது.
ஈஸ்வரி தனக்கு ஒன்னும் தெரியாது போல நந்தகுமார் குடும்பத்தை திட்டிக் கொண்டிருக்கிறார். கோபத்தில் நந்தகுமாரின் அப்பா, இதற்கெல்லாம் காரணம் நீதான், நீ சொத்திற்கு ஆசைப்பட்டு சொன்னதால் தான் நாங்கள் பெண் கேட்க வந்தோம். மற்றபடி எங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே கிடையாது என்று சொல்கிறார். இதை கேட்டு ராஜாங்கம், ஈஸ்வரி மீது கோபப்படுகிறார். அதற்குப்பின் தாமரையின் அம்மா, தனக்கு தெரிந்த ஒருவரை மாப்பிள்ளையாக அழைத்து வருகிறார். ஆனால், அவரும் பணத்திற்காக ஆசைப்படுகிறார் என்று தெரிந்தவுடன் ராஜாங்கம் வேண்டாம் என்கிறார். பின் சேது, எல்லா வகையிலும் ஆறுமுகம் தான் கண்மணிக்கு பொருத்தமாக இருப்பார் என்று புரியவைக்கிறார். இதனால் ராஜாங்கம், ஆறுமுகத்தை மண்டபத்திற்கு அழைத்து வர சொல்கிறார். கண்மணி ரொம்ப சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.