ராஜாங்கம் கொடுத்த எச்சரிக்கை, தமிழ்செல்வியை சிக்க வைக்க ஈஸ்வரி செய்யும் சதி - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வி, நான் இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து பெண்கள்தான் சமைக்கிறார்கள். இன்று ஒரு நாளைக்கு பெண்களுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும். ஆண்கள் தான் சமைக்க வேண்டும் என்றார். இதை கேட்டவுடன் ஈஸ்வரி திட்டினார். ராஜாங்கமும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சேது, பிரச்சனை ஏதாவது வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். உடனே ராஜாங்கம், இது தான் உன்னுடைய ஆசை. நாங்கள் எல்லோரும் சமைக்கிறோம். பெண்கள் எல்லோருமே ரெஸ்ட் எடுங்கள் என்றார்.
காமேஷ், தாமரை- சாவித்திரியின் புகைப்படத்தை வைத்து பிச்சை எடுப்பதை ஒருவர் தாமரிடம் சொல்லி விட்டார். இதை அறிந்த தாமரை கோபத்தில் கொந்தளித்து காமேஷிடம் சண்டைக்கு போனார். பின் கோயில் என்று கூட பார்க்காமல் அந்த இடத்திலேயே தாமரை, காமேஷை புரட்டி எடுக்கிறார். இன்னொரு பக்கம் கிச்சனில் ராஜாங்கம், சேது, கருப்பு எல்லா ஆண்களுமே சமைத்துக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து வீட்டில் உள்ள எல்லா பெண்களும் சந்தோஷப்பட்டார்கள்.
சின்ன மருமகள்:
ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து சமைக்கிறோம் என்ற பெயரில் எல்லோருமே கிச்சனை துவம்சம் செய்து வைத்தார்கள். அதற்குப்பின் ஒரு வழியாக சமைத்த சாப்பாடுகளை எல்லா பெண்களுக்கும் அமர வைத்து பரிமாறுகிறார்கள். பெண்களுமே முதலில் சாப்பாடு நன்றாக இல்லாதது போல் நடிக்கிறார்கள். பின் எல்லோருமே சாப்பாடு அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எல்லா ஆண்களும் ரொம்ப சந்தோசப்பட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
கிச்சன் இருக்கும் கோலத்தை பார்த்து அப்பத்தா பயங்கரமாக கத்தினார். வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே கிச்சன் அலங்கோலமாக இருப்பதை பார்த்து கோபப்பட்டார்கள். பின் அப்பத்தா திட்டியதால் சேது மற்ற ஆண்கள் எல்லோருமே கிச்சனை சரி செய்தார்கள். அதற்குப்பின் தமிழ்- சேது இருவரும் இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப் பின் தமிழ் செல்வி-சேது இருவரும் பிரக்னன்சி போட்டோ சூட்டை நடத்தினார்கள். விதவிதமாக உடை அணிந்து அழகாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதை ராஜாங்கம் குடும்பத்தினர் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=xS4fioqP5NY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் தமிழ் செல்வி, ஜெனியின் காதலுக்காக ராஜாங்கத்திடம் பேசுகிறார். பின் ராஜாங்கம்-சேது எல்லோருமே ஜெனியின் அப்பாவை சந்தித்து பேசுகிறார்கள். ஜெனியின் அப்பா ரொம்ப மோசமாக ராஜாங்கத்தை பேசி விடுகிறார். இதனால் அவமானப்படுத்தப்பட்டு வந்த ராஜாங்கம் அமைதியாக இருக்கிறார். ஈஸ்வரி இதுதான் சந்தர்ப்பம் என்று தமிழ் திட்டி கொண்டிருக்கிறார். அப்போது ராஜாங்கம், தேர்தல் முடியும் வரை எந்த பிரச்சனை செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுத்துவிட்டு செல்கிறார்.