கடவுள் கொடுத்த உத்தரவால் உண்மையை மறைக்கும் சேது, ராஜாங்கம் கொடுத்த வார்னிங் - சின்ன மருமகள்

By subhashini · 10/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவை அந்த ரவுடிகள் மடக்கி பிடித்து விட்டார்கள். சேதுவை அடித்துப் போட்டுவிட்டு தமிழை கடத்தி சென்று விட்டார்கள். அந்த பக்கம் வந்தவர்கள் சேதுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரித்தார்கள். சேதுவும் கண்விழித்து தமிழை தேடினார். பின் சேது, ராஜாங்கத்திற்கு போன் செய்து நடந்ததை சொன்னார். ராஜாங்கம், சேது, தமிழின் அப்பா, கருப்பு எல்லோரும் தமிழை தேடி சென்றார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தன் உறவுக்கார தம்பியிடம் தமிழை கொலை செய்ய சொன்னார்

அவருமே தமிழை கொலை செய்வதற்கு தன் ஆட்களிடம் சொன்னார். தமிழ் ரொம்பவே பயந்து போய் இருந்தார். இன்னொரு பக்கம் எல்லோரும் தமிழை தேடி அலைந்தார்கள். ஒரு கட்டத்தில் கருப்பு , தன் வண்டியின் டயர் அடையாளத்தை வைத்து தமிழிருக்கும் இடத்திற்கு சென்று விட்டார்கள். சேது அங்கு இருக்கும் ரவுடிகள் எல்லாம் அடித்துப் போட்டு விட்டு தமிழை காப்பாற்றி விட்டார். கடைசியில் போலீஸ் அந்த ரவுடி கும்பலை கைது செய்து விட்டது.

சின்ன மருமகள்:

தமிழ்ச்செல்வியின் வளைகாப்பு கோலாகலமாக தொடங்கியது. வசதி வாய்ப்பு குறைவாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் ராஜாங்கம் வளைகாப்பை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். வீட்டிற்கு வந்த தலைவர் வளைகாப்பு விழாவை சிறப்பாக தொடங்கி வைத்தார். ராஜாங்கம் வீடு சந்தோஷமாக இருக்கிறது. பின் ஏழைப் பெண்களுக்கு ராஜாங்கம், ரெண்டு பவுன் தங்கம் செயின், 50,000 ரூபாய் பணமும் கொடுத்தார். விழா சிறப்பாக முடிந்தவுடன் கட்சியின் தலைவர், தேர்தல் வர இருப்பதால் ராஜாங்கம் குடும்பம் கவனமாக இருக்க வேண்டும். எதிர்கட்சிகள் நிறைய சூழ்ச்சிகள் செய்வார்கள். அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் அறிவுரை சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி தான் கண்ட கனவை பற்றி தன் அம்மாவிடம் சொல்கிறார். அதைக் கேட்ட தமிழ்செல்வியின் அம்மாவும் சாக் ஆகிறார். காரணம், அவருக்குமே இதே மாதிரி கனவு வந்திருக்கிறது. இன்னொரு பக்கம் சேது- அப்பத்தா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சேது இரட்டை குழந்தை பற்றி வீட்டில் சொல்லிவிடலாம் என்கிறார். உடனே அப்பத்தா, சாமியிடம் உத்தரவு கேட்கலாம். கடவுள் ஒத்துக் கொண்டால் சொல்லிவிடலாம் என்கிறார் பின் சேது, சீட்டில் சொல்லலாம், சொல்ல வேண்டாம் என்று எழுதி போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதில் சொல்லக்கூடாது என்பதுதான் வருகிறது. இதனால் இருவரும் வீட்டில் உண்மையை மறைக்கிறார்கள். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து தலைவர் சொன்னது போல எந்த பிரச்சனையிலும் வம்பிழும் மாட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறார். குறிப்பாக ஈஸ்வரி, சாவித்திரி இருவருக்கும் வார்னிங் கொடுக்கிறார். அதற்குப் பின் சேது, தமிழ் இருவரும் சந்தோஷமாக தங்களுடைய ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full