சேது-தமிழின் திருமண நாளை சீர்குலைக்க சாவித்திரி-தாமரை செய்த வேலை, அடுத்து என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, புடவை நகை வளையல் என எல்லாமே திருமண நாளுக்காக வாங்கி தந்தார். தமிழ்செல்வி எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். இதனால் சேதுவிற்கு ஒரே சந்தோசம். இன்னொரு பக்கம் போஸ், செங்கல் சூளைக்கு சென்று அங்கிருக்கும் ஒரு நபரை பணம் கொடுத்து கரெக்ட் பண்ணி கொண்டார். பின் சேது, நான் வேலை செய்ய மாட்டேன். எம்எல்ஏ வரும்போது மட்டும் எனக்கு சிக்னல் கொடு என்று சொல்வதால் அந்த நபருமே ஒத்துக்கொண்டார். பின் போஸ் ஜாலியாக போன் பார்த்துக் கொண்டிருந்தார். எம்எல்ஏ வந்தவுடன் வேலை செய்வது போல நடித்து பாசாங்கு செய்தார்.
இன்னொரு பக்கம் மலர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது காவியா காரை நிறுத்தி மலரிடம் பேசி இருந்தார். மலர்- காவியா இருவருமே ரொம்ப ஜாலியாக நண்பர்கள் போல பேசி கொண்டார்கள். பின் இருவரும் வீட்டிற்கு சேர்ந்து வருவதை பார்த்து தமிழுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்போது காவியா, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்வதால் தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் 12 மணி ஆவதால் சேது, தமிழ்செல்வியை எழுப்பி திருமண நாள் வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்ட அழைத்தார். வீட்டில் எல்லோருமே தமிழ் செல்வி-சேது திருமண நாளை கொண்டாடினார்கள். வழக்கம் போல ஈஸ்வரி- சாவித்திரி இருவரும் பயங்கர கடுப்பில் இருந்தார்கள்.
சின்ன மருமகள்:
சேது, தன்னுடைய முதல் திருமண நாளை நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி தயாராகுவதற்காக வந்தார். உடனே சேது, இன்று முழுவதும் உனக்கு என்ன தேவையோ அது நான் தான் செய்வேன் என்று தமிழ் செல்விக்கு தலை துவட்டி விடுவது, நகை, புடவையை போடுவது என்று எல்லா வேலையும் செய்தார். தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். வீட்டில் எல்லாம் தமிழ்-சேதுவின் திருமண நாளுக்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
பின் தமிழ்-சேது இருவரும் ஜோடியாக வந்தார்கள். அதை பார்த்து அப்பத்தா-ராஜாங்கம் சந்தோசப்பட்டார். பின் பத்து ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். கோயிலில் திருமண ஜோடிகளுக்கு கொடுக்கும் சீர்வரிசியை பார்த்து ஈஸ்வரி, சாவித்திரி இருவரும் வாயை பிளந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=EtlD0hC_rbE
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் புரோமோவில் கோலாகலமாக தமிழ்- சேது இருவரின் திருமண நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. வள்ளி நாடகம், இலவச சாப்பாடு என்று அனைத்துமே சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதை பார்த்து சாவித்திரி, தாமரை இருவருமே வயிறு எறிகிறார்கள். இந்த சந்தோஷத்தை கெடுக்க வேண்டும் என்று சாம்பாரில் பல்லி, கரப்பான் பூச்சியை போட்டு விடுகிறார்கள். பின் அன்னதானம் நடக்கும் இடத்தில் சாவித்திரி, தாமரை இருவரும் சாம்பாரில் பல்லி கிடைக்கிறது என்று பிரச்சனை செய்ததால் ஊர்மக்கள் எல்லோருமே ராஜாங்கத்தை கேள்வி கேட்கிறார்கள்.