சாவித்திரிக்கு வந்த புது சோதனை, வேதனையில் தவிக்கும் சேது - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 30/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அமைச்சர் வீட்டில் இருந்து போஸை பெண்பார்க்கும் விஷயத்தைப் பற்றி ஈஸ்வரிடம் சொன்னார்கள். இதனால் ஈஸ்வரி, தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகன் மற்றும் மகளிடம் எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடித்து விட வேண்டும் என்றெல்லாம் சதி திட்டம் போட்டார். அதற்குப்பின் சேது மேலிருந்து கீழே விழுந்ததால் காலில் அடிபட்டு இருந்தது. இதை அறிந்த தமிழ், சேதுவின் காலில் எண்ணெய் தேய்த்து நீவி விட்டார்.

ராஜாங்கம் வீட்டிற்கு அமைச்சர் தன் மகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோருமே வந்துவிட்டார்கள். மணப்பெண் காவியா நந்தினி ரொம்ப திமிராக நடந்து கொண்டார். ஆனால், அதை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது வந்த போஸ் பெண்ணை பார்த்து சிரித்து வெட்கப்பட்டார். போஸுக்கு பெண்ணை பிடித்து விட்டது. பின் போஸ்-காவியா இருவருக்குமே பிடித்து விடுவதால் இரு வீட்டிலேயுமே திருமணத்தை பேசி முடித்தார்கள்.

சின்ன மருமகள்:

இதையெல்லாம் பார்த்து மலர் ரொம்பவே வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் கல்லூரியில் தேர்வு முடிவுகள் வந்தது. அதில் தமிழ்செல்வி முதல் மதிப்பெண் எடுத்ததால் கல்லூரி ஆசிரியர் மட்டுமில்லாமல் எல்லோருமே பாராட்டுகிறார்கள். அதற்குப்பின் சேது, போஸுக்கு திருமணம் ஆவதை பற்றி தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்ட தனம், நீங்களும் உங்கள் தம்பியை போல என் அக்காவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, தனம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வந்து விடுகிறார். பின் தமிழ்ச்செல்வியுடன் பேசிய தன்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்க்கிறார். அப்போது தமிழ்ச்செல்வி, என்னை விவாகரத்து கொடுத்து விட்டு வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டிருப்பார். அதற்கு சேது, தமிழை அடிக்க சென்று இந்த ஜென்மத்தில் மட்டுமில்லை ஏழெழு ஜென்மத்திலும் நீ தான் என் மனைவி என்று செல்கிறார். அதையெல்லாம் நினைத்து பார்த்து சேது வருத்தப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சாவித்திரி, தாமரை இருவருமே பிச்சைக்கார வேடத்தில் வீட்டு வேலை எல்லாம் செய்து
கொண்டிருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி, போஸ் எல்லோருமே காரில் வந்து இறங்கி சாவித்திரியை வம்பு இழுக்கிறார்கள். கோபத்தில் சாவித்திரி, ஈஸ்வரி மீது கல்லை தூக்கிப் போடப் போகிறார். ஆனால், அதெல்லாம் கனவு. பின் எப்படியாவது இந்த திருமணம் நடக்கக்கூடாது என்று சாவித்திரி- தாமரை இருவரும் திட்டம் போடுகிறார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி- போஸ் இருவருமே இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்று யோசிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full