குழந்தைக்காக தமிழ்செல்வி வீட்டில் தங்க சேது ஒத்து கொள்வாரா? சின்ன மருமகள்
குழந்தைக்காக தமிழ்செல்வி வீட்டில் தங்க சேது ஒத்து கொள்வாரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கல்லூரிக்கு தமிழ்ச்செல்வி தேர்வு எழுத சென்றிருந்தார். அங்கு குழந்தையை தமிழ் அம்மா பார்த்துக் கொண்டார். குழந்தை அழுவதால் தமிழிடம் பால் கொடுக்க சொன்னார்கள். தமிழ் குழந்தையும் கவனித்துக் கொண்டு பரிட்சையும் நல்லபடியாக எழுதி முடித்தார். இதை பார்த்து தமிழின் அம்மா ரொம்பவே பெருமைப்பட்டார். இன்னொரு பக்கம் சேது தன்னுடைய மகளை அன்பாக பார்த்துக் கொண்டார். சேது தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐஸ்வர்யாவும் குழந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்.
அதற்குப்பின் குழந்தையை சனி ஞாயிறு இரண்டு நாட்கள் மாற்றி கொள்ள வேண்டும் பஞ்சாயத்தில் தீர்ப்பு வந்ததால் சேது-தமிழ் இருவரும் வந்தார்கள். மோகனா, குழந்தைக்கு அழகர் என்று பெயர் வைத்திருக்கும் விஷயத்தை சொன்னார். பின் குழந்தையை மாற்றிக் கொண்டார்கள். அப்பத்தா, குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார். அதைக் கேட்டு செய்து எமோஷனலாக அழுதார். பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்ததை நினைத்து சேது ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதேபோல் தமிழும் தன்னுடைய மகனை பார்த்து சந்தோஷப்பட்டார்.
சின்ன மருமகள்:
சேது தன் மகளை ரொம்ப சந்தோஷத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்தார். சேதுவின் மகளுக்குமே தொட்டிலில் போட்டு தமிழ்செல்வி வைத்த பெயரையே அலைந்தார்கள். இன்னொரு பக்கம் தன் மகன் வந்த சந்தோஷத்தில் தமிழ் செல்வி இருந்தார். அப்போது அப்பத்தா, தமிழின் அம்மாவிடம் பெண் குழந்தை சேது விடம் வளரட்டும். மகனை இங்கு வளர்த்துக் கொள்ளலாம். சேது தன்னுடைய அம்மா ஆசையாக வளர்க்கட்டும் என்றெல்லாம் சொல்லிருந்தார். இதை அறிந்த தமிழ்செல்வி கொந்தளிக்கிறார். என் மகள் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்றார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் ஈஸ்வரி, மீனாட்சி குழந்தையின் பெயருக்கு முன்னால் தமிழ்ச்செல்வியின் இன்ஷியல் இருப்பதை கவனித்து அதைப்பற்றி சேதுவிடம் சொன்னார். இதனால் கொந்தளித்த சேது, தமிழ் செல்விக்கு போன் செய்து சண்டை வாங்கினார். தமிழ் செல்வி, என் மகளுக்கு என்னுடைய பெயர்தான் இருக்கும். மகன் பெயர் முன்னாள் உங்கள் பெயர் இன்ஷியல் போட்டிருக்கிறீர்கள். நான் அதைப் பற்றி கேட்கவே இல்லை. என்னுடைய இன்சியலை எடுக்க முடியாது என்றெல்லாம் ஆவேசமாக சண்டை போட்டார். சேதுவால் எதுவும் பேச முடியவில்லை. இதைப் பற்றி சேது, ராஜாங்கத்திடம் சொன்னார். ராஜாங்கம், தமிழ்ச்செல்வி பெயர் இருக்கட்டும். இதை பெரிதாக பிரச்சினை செய்ய வேண்டாம் என்றார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் குழந்தை அழகருக்கு பவுடர் பால் குடித்ததால் வயிறு சரி இல்லாமல் போய்விடுகிறது. இதனால் டாக்டர் தாய்ப்பால் தான் கொடுக்கணும் என்று சொல்லிவிடுகிறார். சேது வேறு வழி இல்லாமல் தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வெளியே குடிசை போட்டு தங்குகிறார். இதை பார்த்து அப்பத்தா, நீங்கள் தமிழ்செல்வியை உங்கள் வீட்டிற்கு வெளியே குடிசை போட்டு தங்க வைத்ததற்காக தான் உனக்கு இந்த தண்டனை என்று சொல்கிறார்.