போஸின் முகத்திரையை கிழித்த சேது, அழுது புரண்டு ட்ராமா போடும் ஈஸ்வரி, அடுத்து என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, ஈஸ்வரி இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். ஆனால், இதையெல்லாம் காவியா கேட்கவில்லை. அவர் காதில் ஹெட்செட் போட்டிருந்தார். பின் காவியா, கல்யாணத்தை எப்ப நிறுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மகனுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என்றார். இதை கேட்டு ஈஸ்வரி ஆடிப் போகிறாய். சித்ரா, எப்படியாவது அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தையாவது வாங்கணும். சேதுவை உண்மை சொல்ல விடக்கூடாது என்றெல்லாம் சொன்னார்.
ஈஸ்வரி, போஸுக்கு சேர வேண்டிய செக்கை கொடுத்து விடுங்கள் என்று கேட்டார். ராஜாங்கம், அப்பத்தா எல்லோருமே கல்யாணம் முடியட்டும் தருகிறோம் என்று சொன்னார்கள். அதற்குப்பின் காவியா ரூமிற்கு ஈஸ்வரி சென்றார். அங்கு தாமரை, சாவித்ரி இருவருமே உட்கார்ந்து கொண்டு காவியாவிடம் ஒன்றுக்கு இரண்டாக போசை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் கோபப்பட்டு ஈஸ்வரி, சாவித்திரி இடம் சண்டை போட்டார். அதற்குப்பின் சாவித்ரி, தாமரை இருவரையும் ஈஸ்வரி வெளியே அனுப்பி விட்டார்.
சின்ன மருமகள்:
அதற்கு பின் வந்த போஸ், காவியா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதார். ஆனால், காவியா மனம் இறங்காமல் போசை திட்டி விட்டார். அதற்குப்பின் மாப்பிள்ளை, மணமகள் இருவரையும் மேடைக்கு அழைத்தார்கள். தனம்- தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தனம், இந்த கல்யாணம் நடக்குமா? சேது மாமா உண்மையை கண்டுபிடிப்பாரா? என்றார். அதற்கு தமிழ், கண்டிப்பாக சேது உண்மையை கண்டுபிடிப்பார் என்றார். அதற்கு பின் அப்பத்தா, ஈஸ்வரியை அழைத்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மேடையில் எல்லோரும் முன்பும் தந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம், தன்னுடைய உயிரை காப்பாற்றிய போஸுக்காக ஒரு கோடி ரூபாய் செக்கை எல்லோரும் முன்பும் மேடையில் கொடுக்கிறார். அந்த சமயம் வந்த சேது, பணத்தை கொடுக்காதீர்கள் என்று சொல்கிறார். அப்போது தான் தமிழ்செல்விக்கு உயிரே வருகிறது. ஈஸ்வரி ரொம்பவே பதறுகிறார்,. பின் சேது, உண்மையிலேயே மருந்து கொண்டு வந்தது போஸ் கிடையாது தமிழ்செல்வி தான். தமிழ்ச்செல்வி கஷ்டப்பட்டு உங்களுக்காக மருந்து கொண்டு வந்தார். தமிழ்செல்வியின் தலையில் அடித்து அவர் மயக்கம் போட்ட பின் போஸ் அந்த மருந்தை எடுத்து வந்தார் என்று நடந்ததை எல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே ஈஸ்வரி கதறி அழுது ஒரு டிராமா செய்து, சேது எல்லாம் பொய் என்று சொல்லிவிடுகிறார். அதனால் ராஜாங்கத்திற்கு சேது சொல்வதில் நம்பிக்கையே இல்லை. பின் சேது, தான் அழைத்த வந்த ஆட்கள் மூலம் உண்மை சொல்கிறார். வைத்தியரின் மகள், நடந்ததை எல்லாம் சொல்கிறார். அதைக் கேட்டு ராஜாங்கம் ஷாக் ஆகிறார். ஈஸ்வரிக்கு கோபத்தில் நின்று கொண்டிருக்கிறார். போஸிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.