ராஜாங்கம் சொன்ன வார்த்தையால் சேது எடுத்த முடிவு, தமிழ் நிலைமை என்ன? சின்ன மருமகள்

By subhashini · 9/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து எமோஷனலாக சேது அழுது கொண்டு தன்னுடைய காதலை சொன்னார். ஆனால், அதற்கு பிறகு தான் தெரிகிறது அது சேது உடைய கனவு. பின் சேதுவின் மனசாட்சி தமிழிடம் காதலை சொல்ல போனார். ஆனால், சேது மன்னிப்பு மட்டும் கேட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் ராஜாங்கத்தின் தம்பி எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். ஈஸ்வரி திமிராக யாரிடமும் மன்னிப்பு கேட்காமல் நின்று கொண்டிருந்தார். அதற்குப்பின் போஸ், தன் மீது தவறு இல்லாதது போல பேசி இருந்தார். காவியா, என்னை ஏமாற்றியதற்கு உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்றார்.

காவியா, உனக்கு பெரிய தண்டனையா கொடுக்கணும். நீ நல்லவன் என்று என் மனதிற்கு தோன்றும் வரை இந்த ரூமில் இருக்கவே கூடாது. கிச்சனில் தான் தூங்கணும். யாராவது கேட்டாலும் காவியா மேடம் சொன்னார்கள் என்று சொல் என திட்டி அனுப்பினார். வேறு வழியில்லாமல் போஸ் கிச்சனில் தூங்கினார். இதை பார்த்து சாவித்திரி- தாமரை இருவருமே சந்தோஷப்பட்டார்கள். ஈஸ்வரி கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.

சின்ன மருமகள்:

இன்னொரு பக்கம் சேது, தமிழ் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது சேதுவின் கனவில் தமிழ் டாக்டர் ஆகிவிட்டார். சேது ராஜாங்கம் இடத்திற்கு வந்து விட்டார். பின் தன் மகன் வளர்ந்து பெரியாளாகியிருந்தார். மகள் கல்லூரி படித்தார். பின் சேது- தமிழ் இருவரும் சந்தோசமாக பாட்டு பாடி இருந்தார்கள். இதையெல்லாம் சேது கனவில் பாடுவது போல் நிஜத்திலும் பாடி சந்தோசப்பட்டார். இதை பார்த்த தனம், சேதுவை எழுப்பினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, தான் கண்ட கனவை தனத்திடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். தனம், சீக்கிரத்திலேயே நீங்களும் அக்காவும் சேர்வது வாழ்வீர்கள் என்று சொல்கிறார். அதற்குப்பின் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைப்பதை பற்றி பேசுகிறார். உடனே சேதுவை அழைத்த ராஜாங்கம், எனக்கு தமிழ்செல்வியை விவாகரத்து செய்யணுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. யோசித்து முடிவெடு என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

சேது, தமிழ்ச்செல்வியை ரொம்பவே காயப்படுத்தி விட்டேன். அந்த காயங்களுக்கு எல்லாம் மருந்து போட்டுவிட்டு என்னுடைய காதலை சொல்ல போகிறேன். தமிழ்செல்வியை நான் விவாகரத்து செய்ய மாட்டேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ராஜாங்கம்- அப்பத்தா இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் தமிழ்செல்வி கல்லூரிக்கு கிளம்பும்போது கருப்பன், இனிமேல் நீங்கள் எங்கு போனாலும் காரில் தான் போக வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கிறார்கள். தயவு செய்து காரில் ஏறுங்கள் என்று சொல்கிறார். தமிழும் எதுவும் சொல்லாமல் காரில் ஏறி செல்கிறார். இதை பார்த்து சேது சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full