தமிழ்செல்வி நடத்திய பஞ்சாயத்து, சேது-ஐசு நிச்சயதார்த்தம் நடந்ததா? சின்ன மருமகள்

By subhashini · 15/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், நாளைக்கு எப்படி முடியும் என்றார். ஐசு அப்பா, நீங்கள் திடீரென்று மனம் மாறி ஏதாவது நடந்து விட்டால் என் மகளின் வாழ்க்கை என்ன ஆகுவது? நாளைக்கு நிச்சயதார்த்தம் முடித்துவிடலாம். அதற்குப்பின் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்றார். இதனால் ராஜாங்கம்-சேது இருவரும் ஒத்துக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் தமிழ், கல்லூரிக்கு போகும்போது விபத்து ஏற்பட்டு நான்கு பேர் சீரியஸான நிலையில் இருந்தார்கள். தமிழ், அவர்களுக்கு முதலுதவி செய்தார். பின் அவர்களை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் அந்த சின்ன பெண்ணின் உயிரை தமிழ்ச்செல்வி காப்பாற்றி விட்டார்.

மீதி பேருடைய உயிரை காப்பாற்ற தமிழ் போராடிக் கொண்டிருந்தார். தமிழ்ச்செல்வி, அந்த நான்கு பேருக்கும் முதலுதவி செய்தார். தேவையான பொருள்களையும் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போதே மற்றவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்தார் தமிழ். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, தான் படிக்கும் கல்லூரிக்கு அழைத்து சென்றார். தமிழ்ச்செல்வி நடந்தது எல்லாம் சொல்கிறார். பின் அந்த நான்கு பேரின் உயிருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்து விட்டது. தமிழ்செல்வ செய்த உதவியை பார்த்து எல்லோருமே பாராட்டினார்கள்.

சின்ன மருமகள்:

இன்னொரு பக்கம் கருப்பன், சேதுவின் முடிவை தவறு என்று சொல்லி புரிய வைத்தார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி, கருப்பனை திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் அப்பத்தா, மலர் இருவருமே ராஜாங்கத்திடம் சேது- தமிழை சேர்த்து வைக்க சொல்லியும் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்லியும் கெஞ்சி கதறி அழுதார்கள். ராஜாங்கம், இது என்னுடைய முடிவோ, விருப்பமோ கிடையாது என்று அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சேதுவுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதை அறிந்து மாணிக்கம் கோபப்பட்டு புலம்பி கொண்டிருந்தார். தமிழ்ச்செல்வி, எப்போது? எங்கு நடக்கிறது? கிளம்பி போகலாம் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் கோவிலில் தடபுடலாக சேது- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆனால், இதை எல்லாம் பார்த்து அப்பத்தா வருத்தப்படுகிறார். பின் தமிழ்ச்செல்வி, மாணிக்கம் எல்லோருமே தங்களுக்கு தெரிந்த ஊராட்களை அழைத்துக் கொண்டு கோயில் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.
தமிழ்ச்செல்வி பார்த்தவுடன் சாவித்திரி, தாமரை இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். நிச்சயதார்த்தம் நடக்குமா? என்று ஈஸ்வரி ரொம்பவே பதறுகிறார். சேது எந்த கவலையும் இல்லாமல் திமிராக நின்று கொண்டிருக்கிறார். ஈஸ்வரி, தமிழை திட்டி கொண்டு இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்பத்தா, அவளுடைய நியாயத்தை கேட்க வந்திருக்கிறாள். உரிமையை கேட்கிறாள் என்று சொல்கிறாள். தமிழ்ச்செல்வி, அதெல்லாம் ஒன்றும் இல்லை. என்னை அறுத்து விட்டுட்டு அவர் எத்தனை கல்யாணம் வேனாலும் பண்ணிக்கொள்ளட்டும். எனக்கு அதில் கவலை இல்லை. எனக்கு அவர் கட்டின தாலி ரொம்ப பாரமாக இருக்கிறது. என்னை அத்து விடுங்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோருமே ஆடி போகிறார்கள். அப்பத்தா, எதற்காக இப்படி முடிவெடுத்தாய்? என்று கேட்கிறார். தமிழ்செல்வி,எனக்கு இந்த வாழ்க்கையில் விருப்பமில்லை என்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full