தமிழிடம் மன்னிப்பு கேட்கும் சேது, ஆறுமுகத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் ராஜாங்கம்- சின்ன மருமகள்

By subhashini · 18/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஆறுமுகம்- கண்மணி திருமணம் நடந்து விட்டது. வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். தமிழ்ச்செல்வி திருமணம் நடந்த சந்தோஷத்தில் அங்கு இருந்து சென்று விட்டார். அதை பார்த்து சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் ராஜாங்கம் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது ராஜாங்கம், தன் மகளின் வாழ்க்கையில் நடந்ததை நினைத்து பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரி, நான் வேண்டும் என செய்யவில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

பின் ஈஸ்வரியின் கணவர், சாட்டை எடுத்து வந்து தன் மனைவி, மகள் என்று கூட பார்க்காமல் அடித்தார். அதோடு வீட்டை விட்டு கொட்டகையில் இருக்க சொன்னார். அதற்குப்பின் அப்பத்தா, நம் வீட்டிற்கு வந்த பிரச்சனையை தமிழ்செல்வி தான் தீர்த்து வைத்தார். அவள் தான் நம் குடும்பத்திற்கு ஏற்ற மருமகள். அவளுக்கு விவாகரத்து கொடுத்து அனுப்பி வைக்க வேண்டாம் என்று சொன்னார். இதை கேட்டு தாமரையின் அம்மா கோபப்பட்டு திட்டினார். உடனே அப்பத்தா, தாமரையின் அம்மா செய்த வேலையைப் பற்றி பேசி இருந்தார். பின் ராஜாங்கம், சந்தோசமான நேரத்தில் தேவையில்லாமல் பேச வேண்டாம் என்றார்.

சின்ன மருமகள் சீரியல்:

ஹோட்டல் ஓனர், தமிழ்செல்வியை பார்த்து பயங்கரமாக திட்டினார். இனிமேல் இந்த இடத்தில் வேலை செய்ய தேவையில்லை. ஒழுங்கு மரியாதையாக கிளம்பு. உனக்கு சம்பளமலம் கொடுக்க முடியாது என்று திட்டி அனுப்பி விட்டார். பின் அந்த ஓனரை சந்தித்த அப்பத்தா, அவள் யார் தெரியுமா? அமைச்சர் மருமகள். அவளை மரியாதையாக நடத்து என்று சொன்னார். இதனால் அந்த ஓனர் ஆடிப் போய் மீண்டும் தமிழ்செல்வியை வேலைக்கு சேர்த்து கொண்டார். இன்னொரு பக்கம் கொட்டைக்கு போக ஈஸ்வரியும் அவருடைய மகளும் வேதனையில் புலம்பி கொண்டிருந்தார்கள் .

கடந்த வாரம் எபிசோட்:

அதற்குப்பின் தமிழ்ச்செல்வி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது தமிழ்செல்வியை பார்த்தவுடன் ஈஸ்வரி சண்டைக்கு போனார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி இருக்கும் இடத்திற்கு கண்மணி-ஆறுமுகம் வந்தார்கள். சந்தோஷமாக தமிழ் செல்வி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சேது, கண்மணி பார்த்து சந்தோஷப்பட்டார். அப்போது தமிழ்செல்வி, ஆறுமுகத்தை மாப்பிள்ளை என்று மரியாதையாக உறவு முறைப்படி கூப்பிடுங்கள் என்று சொல்வதால் சேதுவுமே அப்படியே கூப்பிட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கண்மணி, நீங்கள் இருவரும் சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். அதற்குப்பின் சேது- தமிழ் இருவரும் ஜோடியாக சேர்ந்து கண்மணி, ஆறுமுகத்தை ஆசிர்வாதம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் கொசு தொல்லை தாங்க முடியாமல் ஈஸ்வரியும் அவருடைய மகளும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்குப்பின் கண்மணி, ஆறுமுகம் இருவரும் சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இன்னொரு பக்கம் சேது, என் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி. நீ உண்மையை சொல்லவில்லை என்றால் என் தங்கையின் வாழ்க்கை என்னாயிருக்குமோ என்று பேசுகிறார். அதற்கு தமிழ்ச்செல்வி, கண்மணி என்னை அன்பாகத்தான் பார்க்கிறார்.

சீரியல் ட்ராக்:

அவளுடைய நான் கஷ்டப்பட விட மாட்டேன் என்ன சொல்கிறார். உடனே சேது, என்னிடம் சொல்ல வேண்டியது தானே என்று சொல்கிறார். அதற்கு தமிழ்ச்செல்வி நக்கலாக பேசி இருக்கிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்விக்கு போன் செய்த அவருடைய அம்மா, கண்மணியின் திருமணத்தை பற்றி கேட்கிறார். தமிழ்செல்வி நடந்த எல்லாத்தையும் செல்கிறார். அதற்குப்பின் ஆறுமுகத்திற்கு ராஜாங்கம் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள எல்லோருமே மரியாதை கொடுக்கிறார்கள். வேலைக்காரன் என்று பார்க்காமல் தங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆகவே துணி எல்லாம் வாங்கி கொடுத்து அழகு பார்க்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full