தமிழ்செல்வியின் மனதை மாற்ற சேது செய்த வேலை, ராஜாங்கம் சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்

By subhashini · 7/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தமிழ்செல்வியின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று தனத்திடம் கேட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்வது போல் நடித்து பாசாங்கு செய்து கொண்டிருந்தார். இது எல்லாம் காவியாவின் அப்பா நம்பி காவியாவிற்கு ஃபோன் செய்து சொன்னார். இன்னொரு பக்கம் தன்னை கிண்டலாக பேசிய தனத்தை, ஐஸ்வர்யா திட்டி அடித்தார். கோபத்தில் தனம், ஐஸ்வர்யாவை அடிக்க போகும்போது சித்ரா, தனத்தை மோசமாக பேசி அனுப்பி விட்டார். இது எல்லாம் தனம் தன்னுடைய அக்காவிடம் சொல்லி அழுதார்.

தமிழ், எதற்காக என்னுடைய தங்கையை அடித்தாய். நீங்கள் ரெண்டு பேரும் பேசியது தவறுதான். முதலில் மன்னிப்பு கேள் என்றார். ஐஸ்வர்யா முடியாது என்று திமிராக பேசி இருந்தார். கோபத்தில் தமிழ், ஐஸ்வர்யாவை அடித்து விட்டார். இன்னொரு பக்கம் சேது, தமிழ் இடம் மன்னிப்பு கேட்பதற்காக ஒரு புடவை முழுக்க சாரி என்று எழுதி கொண்டு வந்து கொடுத்தார். அதை தமிழ்செல்வியும் கட்டிக் கொண்டு வந்து நிற்கிறார். சேது, என்னை மன்னித்துவிடு என்றார். கோபப்பட்ட தமிழ், ஊர் மத்தியில் குடித்துவிட்டு என்னையும் என்னுடைய குழந்தையையும் கேவலமாக நீங்கள் பேசுவீர்கள்.

சின்ன மருமகள்:

இப்போ நாலு செவுத்துக்குள் நின்று சாரி என்று சொன்னால் நான் மன்னித்து விடணுமா? மன்னிக்க மாட்டேன் என்றார். இன்னொரு பக்கம் போஸ் திருந்தி விட்டான் என்று காவியாவின் அம்மா போன் செய்து ஈஸ்வரிடம் பேசி இருந்தார். பின் ஈஸ்வரி, காவியாவின் அம்மா எல்லோருமே காவியாவை மனமிரங்கி போஸ் உடன் சேர்ந்து வாழ சொன்னார்கள். ஆனால், காவியா மறுத்தார். அதற்கு பின் ஐஸ்வர்யா, தமிழ் தன்னிடம் தகராறு செய்த விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்லி புலம்பினார். இன்னொரு பக்கம் சேது, தமிழ் சொன்ன விஷயத்தை சொன்னார். கருப்பன், நீ பொதுவெளியில் மன்னிப்பு கேள். தமிழ் மனம் மாறும் என்றார். உடனே சேது, இதற்கு நானே ஒரு முடிவு எடுக்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது சேது,
தமிழின் காலை அமுத்திவிட்டு தன்னுடைய குழந்தையிடம் ரொம்ப எமோஷனலாக பேசி மன்னிப்பு கேட்கிறார். அதற்குப்பின் சாவித்திரி- தாமரை இருவரும் கோவிலில் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, சாவித்திரி செய்த தவறை பற்றி சுட்டிக்காட்டி வம்பு இழுக்கிறார். உடனே தாமரை, உங்கள் மகன் போஸ் செய்தது மட்டும் நியாயமா? என்று சொல்கிறார். பின் இருவரும் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இதனால் கோபப்பட்ட ராஜாங்கம் இருவரையும் திட்டி விடுகிறார். பின் ராஜாங்கம், தாமரைக்கு சீக்கிரமாக திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஏதாவது செய்து கொண்டிருப்பாள். தரகரிடம் சொல்லி ஏற்பாடு செய்ய சொல் என்கிறார். இன்னொரு பக்கம் சேது, தமிழ்ச்செல்வி- மலர் இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு செல்கிறார். சேது, கருப்பனிடம் சொல்லி ஊர் முழுக்க சாரி தமிழ்ச்செல்வி என்று போஸ்டரை ஓட்ட சொல்லியிருக்கிறார். முதலில் தமிழ் செல்வி அதை கவனிக்கவில்லை. பின் சேது ஏதேதோ சொல்லி தமிழ்செல்வியை போஸ்டர் பார்க்க வைக்கிறார். அதை பார்த்து தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full