தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் சேது, ஏற்றுக்கொள்வாரா தமிழ்செல்வி? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாப்பாட்டை பார்த்து ஊர் மக்கள் எல்லோருமே பதறிப் போய், இப்படி எல்லாம் அன்னதானம் போடுவதா? என்றெல்லாம் எல்லோரும் கேள்வி கேட்டார்கள். கோபத்தில் கொந்தளித்த ராஜாங்கம். சாப்பாடு ஏற்பாடு செய்தவர்களை திட்டிக் கொண்டிருந்தார். உடனே ராஜாங்கத்தின் மூத்த மகன்- கருப்பு, இது நம்முடைய சாப்பாடு இல்லை. இது வேறொருவர் கொண்டு வந்து சாப்பாடு. நம்முடைய சாப்பாடு அங்கு பத்திரமாக இருக்கிறது என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள பெருமூச்சு விட்டார்கள். சாவித்திரி-தாமரை இருவரும் பிளான் சொதப்பியதை நினைத்து வருத்தப்பட்டார்கள்.
எல்லோருமே தமிழ்- சேது இருவரையும் வாழ்த்துகிறார்கள். சாவித்திரி- ஈஸ்வரி இருவருமே தனித்தனியாக இந்த மூன்றாவது பரிகாரம் நிறைவேறக்கூடாது என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம்
மலர், மாமா திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி பெருமையாக பேசி இருந்தார். தமிழ், இதன் மூலம் மற்றவர்களுக்கு நல்லது நடக்கிறது என்பதால் தான் நான் ஒத்துக்கொண்டேன். எனக்கு இந்த திருமண கொண்டாட்டத்தில் விருப்பம் கிடையாது. ஊர்மத்தியில் என்னை அவ்வளவு அசிங்கப்படுத்திவிட்டு மீண்டும் என்னால் பழையபடி இருக்க முடியாது என்று அங்கிருந்து சென்று விட்டார்.
சின்ன மருமகள்:
கோலாகலமாக வள்ளி முருகன் திருமண நாடகம் நடக்கிறது. ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பத்தா, வள்ளி- முருகன் இடத்தில் சேது, தமிழை நினைத்து பார்த்து சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி, தாமரை இருவரும் இந்த நாடகத்தை எப்படி கெடுப்பது என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கு வந்த ஈஸ்வரி, மூன்றாவது பரிகாரமும் முடிந்து விட்டால் சேது- தமிழ் சேர்ந்து விடுவார்கள்.
சீரியல் ட்ராக்:
அதை ஏதாவது செய்து கெடுக்க வேண்டியது தானே என்றெல்லாம் ஏத்தி விட்டார்கள். உஷாரான சாவித்திரி, நீங்களே செய்ய வேண்டியது தானே. நாங்கள் திட்டுவாங்கிக் கொள்வதா? என்று அமைதியாகி விட்டார்கள். பின் தாமரை, அங்கு இருக்கும் நபரிடமிருந்து ஒரு போனை வாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து நாடக இடத்தில் பாம் இருப்பது போல நடித்தார். ஆனால், போலீஸ் தாமரையை திட்டி போனை வைத்து விட்டார். நல்லபடியாக வள்ளி முருகன் திருமண நாடகம் முடிந்துவிட்டது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் நல்லபடியாக வள்ளி திருமணம் நாடகம் முடிந்து அந்த மாலையும் சேது- தமிழ் கழுத்தில் விழுந்து விடுகிறது. பின் மூன்று பரிகாரங்களும் நல்லபடியாக முடிந்ததால் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே வீட்டிற்கு போகிறார்கள். பின் வீட்டில் தமிழ்-சேது இருவருக்கும் முதலிரவு செட் அப் செய்து இருக்கிறார்கள். அதை பார்த்து தமிழ் பயங்கரமாக கோபப்படுகிறார். பின் சேது, தான் செய்த தவறை உணர்ந்து ரொம்ப எமோஷனலாக அழுது பேசி மன்னிப்பு கேட்கிறார். ஆனால், தமிழ் ஏற்றுக்கொள்ளவில்லை.
சேது சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.