குற்ற உணர்ச்சியில் தமிழிடம் மன்னிப்பு கேட்கும் சேது, காவியா எடுக்கும் முடிவு என்ன? சின்ன மருமகள்

By subhashini · 5/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸின் சுயரூபம் வெளியே வந்ததால் ஆத்திரம் தாங்க முடியாமல் ராஜாங்கம் அவரை அடித்தார். அதற்குப்பின் போஸுக்கு கொடுக்க வேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை தமிழ்ச்செல்வி இடம் ராஜாங்கம் கொடுத்தார். தமிழ்ச்செல்வி, இந்த பணம் உங்களுடைய உயிருக்கு விலை கிடையாது. எனக்கு இந்த பணம் தேவையில்லை என்றார். உடனே அப்பத்தா, தமிழ்ச்செல்விக்கு வேண்டாம் என்றாலும் அவருடைய பெயரில் இந்த பணத்தை போட்டு விடுவேன். தமிழ் செல்வி அந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றார். உடனே தாமரை, போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விஷயத்தை எல்லோரிடமும் சொன்னார்.

பின் காவியாவுமே நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார், கோபத்தில் கொந்தளித்த ராஜாங்கம், போஸை அடி வெளுத்து வாங்கினார். ஈஸ்வரி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுமே ராஜாங்கத்திற்கு ஆத்திரம் அடக்க முடியவில்லை. பின் வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். உடனே காவியா, இந்த கேவலமானவன் இங்கிருந்து போகக்கூடாது. இவனை இப்படியே விட்டால் எத்தனையோ பேரை ஏமாற்றுவான். என்னை ஏமாற்றியதற்கு தண்டனையாக இவனை நான் கல்யாணம் செய்து கொள்கிறேன். தினம் தினம் நான் சித்திரவதை செய்யணும் என்றார்.

சின்ன மருமகள்:

போஸ், காவ்யா திருமணம் நல்லபடியாக நடந்து முடிகிறது. திருமணம் முடிந்த உடனே காவியா, தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டி தன்னுடைய அம்மாவிடம் கொடுத்துவிட்டு இங்கு கொண்டு வந்த சீர்வரிசைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போங்க. இந்த சொத்துக்காக தானே இவன் என்னை கல்யாணம் செய்து கொண்டான். ஆனால், இது எதுவுமே அவனுக்கு கிடைக்கக்கூடாது என்றார். உடனே பதறிப் போன ஈஸ்வரி, அதெல்லாம் முடியாது. இங்கே இருக்கணும் என்றார். அதற்கு காவியா, இப்ப இதுதான் ட்ரெண்டு. இங்க ஒரு முடி தேங்காய் கூட இருக்கக் கூடாது என்றார்.

சீரியல் ட்ராக்:

ராஜாங்கம், காவியா சொல்வதை ஏற்றுக் கொண்டார். இதனால் ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் ராஜாங்கம், சேது-தமிழ் இருவருக்குமே நன்றி சொல்லி எமோசனலாக பேசினார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி- சித்ரா இருவரும் சீர்வரிசை பறிபோனது நினைத்து புலம்பி கொண்டிருந்தார்கள். இதை பார்த்து தாமரை, சாவித்திரி இருவரும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் அப்பத்தா, தமிழ்ச்செல்வி தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றியதற்காக மன்னிக்க சொல்லி கேட்டார். சேது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, தமிழ் இடம் மன்னிப்பு கேட்பதற்காக வருகிறார். பின் தமிழை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து எமோஷனலாக சேது அழுது கொண்டு தன்னுடைய காதலை சொல்கிறார். ஆனால், அதற்கு பிறகு தான் தெரிகிறது அது சேது உடைய கனவு. பின் சேதுவின் மனசாட்சி தமிழிடம் காதலை சொல்ல சொல்கிறது. ஆனால், சேது மன்னிப்பு மட்டும் கேட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் ராஜாங்கத்தின் தம்பி எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார். ஈஸ்வரி திமிராக யாரிடமும் மன்னிப்பு கேட்காமல் நின்று கொண்டிருக்கிறார். அதற்குப்பின் போஸ், தன் மீது தவறு இல்லாதது போல பேசுகிறார். காவியா, என்னை ஏமாற்றியதற்கு உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full