சமையல் என்ற பெயரில் சேது செய்யும் அட்ராசிட்டி, சந்தோஷத்தில் தமிழ்செல்வி - சின்ன மருமகள்

By subhashini · 15/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி கோர்ட் ஆர்டர் படி சேதுவின் வீட்டிற்கு தயாராகி கிளம்பினார். இன்னொரு பக்கம் வீட்டில் சேது, அவளுடன் சேர்ந்ததெல்லாம் வாழ முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தவுடன் சேதுவியின் மொத்த குடும்பமும் கொந்தளித்தது. குறிப்பாக சேதுவின் அத்தை ருத்ர தாண்டவம் ஆடினார். அதற்கு தமிழ்ச்செல்வி, கோர்ட் ஆர்டர் போட்டதால் நான் இங்கு வந்தேன் என்றார். அதற்கு சேது, நீ சொன்னால் நான் கேட்பதற்கு உன் வீட்டு நாய் இல்லை. நான் உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்றார்.

உடனே அப்பத்தா, அவள் சட்டப்படிதான் வந்திருந்தார். எதற்காக இப்படி சொல்கிறீர்கள். நீ வீட்டிற்குள் வா தமிழ்செல்வி என்றார். அதற்கு தமிழ் செல்வி, நான் வீட்டுக்கு வர மாட்டேன். கெஸ்ட் ஹவுஸில் இருப்பேன் இருப்பேன் என்று சொன்னார். இதனால் அப்பத்தாவால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்ற தமிழ் செல்வி பால் காய்ச்சி தன்னுடைய அக்காவிற்கு கொடுத்தார். அதற்குப்பின் போன் செய் வக்கீல் இடம் தமிழ்செல்வி, சேது நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொன்னார். உடனே வக்கீல், இதற்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என்றார்.

சின்ன மருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் தமிழ்செல்வியின் வக்கீல் ராஜாங்கம் வீட்டிற்கு வந்தார். அப்போது வக்கீல், கோர்ட் ஆர்டரை மதிக்க வேண்டும். சேது கண்டிப்பாக தமிழ் செல்வியுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழ வேண்டும். நீங்கள் முடியாது என்று மறுத்தால் கண்டிப்பாக உங்கள் மீது கேஸ் போடுவோம் என்று சொன்னார். அதற்குப்பின் சேதுவிடம் ராஜாங்கம், கோர்ட் ஆர்டரை மதிக்க வேண்டும் என்று சொல்வதால் சேதுவிற்கு வேறு வழி தெரியாமல் சம்மதித்தார். அதற்கு பின்பு சேதுவின் அத்தை, சித்தி இருவருமே தமிழ்செல்வியை பற்றி மீண்டும் தேவையில்லாமல் பேசி சேதுவை உஸ் பேத்தி அனுப்பி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

தமிழ்செல்வி இருக்கும் இடத்திற்கு போன சேது, வழக்கம் போல் அவரிடம் சண்டை வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேது, என்னுடைய துணிகள் எல்லாம் துவைத்துவை என்றார். அதற்கு தமிழ் செல்வி, நான் உங்களுடன் சேர்ந்து வாழ வந்தேன். உங்களுக்கு சேவகம் செய்யவில்லை என்று நக்கலாக சொல்லி சிரித்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்விக்கு போன் செய்த அவருடைய அம்மா நடந்ததை பற்றி விசாரித்தார். இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று சாப்பிட போனார். அப்போது அப்பத்தா, அந்த வீட்டில் தான் சாப்பிட வேண்டும். நீ இங்கு வரக்கூடாது என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, எந்த ஒரு பெண்ணின் தேவை இல்லாமல் உன்னால் வாழ முடியாதா? நீ சாப்பிடுவது என்றால் உன்னுடைய வீட்டில் உன்னுடைய பொண்டாட்டி இடம் சொல்லி சமைத்து சாப்பிடு. ஒழுங்கு மரியாதையாக இங்கு இருந்து கிளம்பி என்று திட்டி விடுகிறார். இதனால் சேது கோபப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியை சந்தித்த சேதுவின் சித்தி, கடை பக்கம் போனேன். நீ கர்ப்பமாக இருப்பதால் பழம் வாங்கிக் கொண்டு வந்தேன். நீ அங்கு வந்து மகாராணி போல் வாழ வேண்டியது.

சீரியல் ட்ராக்:

உன்னுடைய நிலைமை எப்படி இருக்கிறது பார். நான் எப்போதும் உனக்கு தான் சப்போர்ட் செய்வேன் என்று பேசுகிறார். ஆனால், தமிழ் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சேது, தனக்கு தெரிந்ததை சமைக்கிறார். தமிழ்ச்செல்வி வாய்க் ருசியாக சமைக்கிறார். இருவருமே தனித்தனியாக தாங்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள். சேது சமைத்த சாப்பாடு வாயிலேயே வைக்க முடியவில்லை. இதனால் அவர் சாப்பாட்டை ஆர்டர் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full