சேது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம், தமிழ்செல்வி எடுத்த அதிரடி முடிவு - சின்ன மருமகள்
சேது குழந்தை கடத்தல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஹாஸ்பிடலில் அப்பத்தா குழந்தைக்கு காப்பு மோதிரம் எல்லாம் வாங்கி வந்து போட்டார். தமிழ் செல்வி, அப்பத்தாவை திட்டி விட்டார். அதற்குப்பின் கருப்பன், மலர் இருவரும் குழந்தையை சேது ரூமில் வைத்தார்கள். குழந்தை அழுது கொண்டிருக்கிறது. சேது, ஒழுங்கு மரியாதையாக குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே போங்க என்றார். கருப்பன், குழந்தை அம்மாவிடம் இருக்கணும் இல்லையென்றால் உன்னிடம் இருக்கணும் என்று வாக்குவாதம் செய்தார். இருவருக்கும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் மலர் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.
ஹாஸ்பிடலில் குழந்தைக்கு மஞ்சள் காமாலை வந்திருப்பதால் டாக்டரிடம் கொடுத்து செக் பண்ண சொன்னார் தமிழ்ச்செல்வி. எல்லோரும் குழந்தையை நினைத்து கவலைப்பட்டார்கள். அதற்குப்பின் இன்னொரு குழந்தைக்கும் இதே மாதிரி பிரச்சினை வந்திருக்குமோ என்று பயந்து மலருக்கு போன் செய்து தமிழ்ச்செல்வி ஹாஸ்பிடல் போக சொன்னார். அதற்குப்பின் ஐஸ்வர்யா, நல்லவள் போல சேதுவின் முன்பு நாடகம் ஆடினார். சேதுவும் ஐசு சொல்வதை எல்லாம் சரி என்று கேட்டுக்கொண்டார்.
சின்ன மருமகள்:
அதற்குப்பின் மேனகா, குழந்தையை கொஞ்ச சொல்லி கேட்டார். ராஜாங்கம், சேது குழந்தையை ஏற்றுக் கொள்ளும் வரை என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார். மேனகா, இது நம்முடைய வாரிசு. தயவு செய்து குழந்தையை தூக்குங்கள் என்று சொல்வதால் ராஜாங்கமும் குழந்தையை தூக்கி கொஞ்சினார். அதற்குப்பின் கருப்பு குழந்தை இடம் விளையாடிக் கொண்டிருந்தார். சேதுவை வெறுப்பேற்றுவது போலவே கருப்பு பேசிக் கொண்டிருந்தார். சேது பயங்கரமாக கோபப்பட்டார். பின் கருப்பு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. குழந்தையை பார்த்துக்கொள் என்று அங்கிருந்து சென்று விட்டார். குழந்தை அழுகிறது. சேது, குழந்தையை தூக்கலாமா? வேண்டாமா? என்று அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் குழந்தை அழுவதால் சேதுவின் மனமும் கஷ்டப்படுகிறது. ஆனால், சேது வீராப்பிற்காக குழந்தையை தூக்காமல் இருக்கிறார். குழந்தை அதிகமாக அழுது கொண்டிருந்ததால் மலர் ஓடி வந்து குழந்தையை தூக்கி விடுகிறார். சேது, குழந்தையை ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியாதா? என்று மலர், கருப்பு இருவரையும் திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் ராஜாங்கம் குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கிறார். சேதுவிடம் கொடுத்து குழந்தையை கொஞ்சம் சொல்கிறார் ராஜாங்கம். சேது, என்னால் பழைய விஷயத்தை மறக்க முடியவில்லை. நான் குழந்தையை தூக்க மாட்டேன் என்று அங்கிருந்து செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தமிழ்செல்வி, குழந்தையை ராஜாங்கம் வீட்டிலிருந்து எடுத்து வர வேண்டும் கிளம்புங்கள் என்கிறார். அதைக் கேட்டு அப்பத்தா, தமிழ்செல்வியின் பெற்றோர்கள் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். தமிழ்செல்வி, இனிமேல் என் குழந்தையை அங்கு விட ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு பின் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மேனகா, மலர், கருப்பு மூவரும் குழந்தையை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்று விடுகிறார்கள். அங்கு குழந்தையை கடத்தும் கும்பல் சேதுவின் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கடத்தி விடுகிறார்கள்.