தமிழ்செல்விக்காக சேது செய்த வேலை, கோபத்தில் கொந்தளிக்கும் ஈஸ்வரி - சின்ன மருமகள்

By subhashini · 5/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், இந்த முடிவு நான் எடுக்க முடியாது மலர் தான் எடுக்கணும் என்றார். உடனே மலர், என்னால் போஸுடன் இனி சேர்ந்து வாழ முடியாது. தயவு செய்து எங்கள் இருவரையும் பிரித்து வைத்து விடுங்கள் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, மலரை திட்டினார். பின் மலர் -போஸ் இருவரையுமே ராஜாங்கம் பிரித்து விட்டார். மலர் தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி போஸிடம் கொடுத்து விட்டார். அதோடு போஸ் இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்றார் ராஜாங்கம். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது.

தமிழ்ச்செல்வி, ஸ்கேன் செய்ய ஹாஸ்பிடல் போகணும். நீங்கள் வருவீர்களா? என்று கேட்க, கோபத்தில் சேது திட்டி விட்டு போனார். இதனால் தமிழ்செல்வி ரொம்பவே மனமடைந்து விட்டார். இன்னொரு பக்கம் மலரை பார்த்து தாமரையின் அம்மா, நீ இனிமேல் இந்த வீட்டு மருமகள் கிடையாது. வேலைக்காரி தான். அதற்கான உடைகளை போடு என்று திட்டினார். உடனே ராஜாங்கம், நீ எப்போதும் இந்த வீட்டு மருமகள் தான் என்று மலருக்கு சப்போர்ட் செய்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி அம்மா, அப்பத்தாவிடம் ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை பற்றி சொன்னார்.

சின்ன மருமகள் சீரியல்:

பின் அப்பத்தா ஹாஸ்பிடல் செல்லும் விஷயத்தை அறிந்த தாமரையின் அம்மா, ஈஸ்வரி எல்லோருமே திட்டினார்கள். இருந்தாலும் அப்பத்தா அதை கண்டுகொள்ளவில்லை. ஹாஸ்பிடலில் தமிழ்ச்செல்வியை செக் பண்ண டாக்டர், இரட்டை குழந்தை என்று சொன்னார். இதை கேட்டு தமிழ் செல்வின் அம்மாவும், அப்பத்தாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அப்போது அப்பத்தா, இந்த விஷயத்தை தமிழ்செல்வி இடம் சொல்ல வேண்டாம். என் பேரன் பேதியை சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இந்த விஷயம் தமிழ் செல்விக்கு தெரியவில்லை.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் இரட்டை குழந்தை விஷயத்தை தமிழிடம் இருந்து அவர் அம்மா மறைத்து விட்டார். ஆனால், தமிழுக்கு அப்பத்தா மீது சந்தேகப்பட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, ஹாஸ்பிடலில் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். ஆனால், இரட்டை குழந்தை விஷயத்தை சொல்லவில்லை. இதை எல்லாம் கேட்ட சேது கடுப்பாகி அப்பத்தாவை திட்டிவிட்டு சொன்னார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய அம்மாவிடம் ஏதாவது என்னிடம் மறைக்கிறீர்களா? என்ன பிரச்சினை என்று கேட்டார். ஆனால், தமிழ்செல்வியின் அம்மா ஏதேதோ சொல்லி அனுப்பினார். அதற்குப்பின் வெளியே வரும்போது தரை வழுக்கியதால் சேது, தமிழ்செல்விக்கு அடிபட்டு விடுமோ என்று பயந்து ஒரு பேப்பரில் கவனமாக செல்லவும் என்று எழுதி வைத்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையின் இன்றைய எபிசோட்டில் சேது நினைத்தது போலவே தமிழ் பாசியில் கால் வைத்து வலிக்கு விழ போகிறார். உடனே சேது அவரை பிடித்து விடுகிறார். தன்மீது சேது வைத்த அக்கறை பார்த்து தமிழ் சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் தமிழ், தன்னுடைய துணிகளை எல்லாம் துவைக்கப் போகின்றார். அதை பார்த்த மலர், நான் துவைத்து தருகிறேன் என்கிறார். தமிழ், வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன். இதையெல்லாம் கேட்டு சேது, தமிழுக்காக வருத்தப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் அடுத்த நாளே சேது, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, மிக்சி என்று வீட்டுக்கு தேவையான அனைத்து பொருள்களையுமே வாங்கி வருகிறார். இதை பார்த்து ஈஸ்வரி, தாமரை அம்மா பயங்கரமாக கோபப்படுகிறார்கள். உடனே அவர்கள், எதற்காக இதெல்லாம் வாங்கி வந்தாய் என்று கேள்வி கேட்கிறார்க.ள் அதற்கு சேது, எனக்கு தான் வாங்கி வந்தேன். இதில் என்ன பிரச்சனை என்று சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் போஸ், ராஜாங்கத்தை பழிவாங்க அவருடைய எதிர் உடனே கூட்டணி வைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full