தேர்வு எழுத போக சேதுவிடம் உதவி கேட்கும் தமிழ், ராஜாங்கம் சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்

By subhashini · 12/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தமிழை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டார். அப்போது செக் பண்ண டாக்டர், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வதா? எதுவாக இருந்தாலும் ஸ்கேன் செய்து விட்டு தான் சொல்லுவோம். கீழே விழுந்ததில் கரு கலைந்து இருக்கிறதா? என்று தெரியவில்லை என்று சொல்வதால் சேது ரொம்பவே பயந்தார். பின் தகவல் அறிந்து சேது வீட்டில் உள்ள எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார்கள். தமிழின் அப்பா, அம்மாவும் வந்து ரொம்பவே பதறினார்கள்.

பின் சேது, கடவுளிடம் தமிழுக்காக வேண்டினார். அதற்குப்பின் தமிழை ஸ்கேன் செய்த பிறகு டாக்டர், குழந்தைக்கு எந்த பிரச்சினை இல்லை. தமிழ் நன்றாக இருக்கிறார். ஆனால், அவருடைய காலில் அடிபட்டு இருக்கிறது. அதனால் கொஞ்ச நாட்கள் தமிழ் ரெஸ்ட் எடுக்கணும் என்றார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், சேது எதுவும் சொல்லவில்லை.

சின்ன மருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் தமிழிடம் பேச சொல்லி எல்லோரும் சேதுவை கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், சேது முடியாது என்று ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த சேதுவிடம் தமிழ் பற்றி விசாரித்தார்கள். தமிழுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்தவுடன் ஈஸ்வரி கோபப்பட்டார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வியை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அப்போது தமிழ்செல்வி, நடக்கக்கூடாது என்று எல்லோருமே சொன்னார்கள். அதற்கு தமிழ்செல்வி, எனக்கு எக்ஸாம் இருக்கிறது. நான் கண்டிப்பாக போவேன் என்றார்.

நேற்று எபிசோட்:

அப்பத்தா, சேதுவை அழைத்துப் போக சொன்னார். ஆனால், சேது முடியாது என்றார். அதற்குப் பின் ஈஸ்வரிக்கு போன் செய்த போஸ், நான் ராஜாங்கத்தை அபழிவாங்காமல் விடமாட்டேன். ஆறுமுகத்தை என்ன செய்கிறேன் பார் என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு ராஜாங்கத்திடம் அப்பத்தா, தமிழுக்கு நடந்ததை பற்றி சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சேது சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தமிழும் சாப்பிடுவதற்காக போனார். ஆனால், அவரால் போட முடியவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வியால் நடக்க முடியாதால் சேது அவருக்கு எல்லா உதவிகளையும் செய்கிறார். இதனால் தமிழ்ச்செல்வி மனதுக்குள் சந்தோஷப்பட்டு கொள்கிறாள். இன்னொரு பக்கம் கட்சி தலைவரின் மனைவி ராஜாங்கம் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அவர், பெண்களின் நலனுக்காக சில திட்டங்களை கட்சித் தலைவர் கொண்டு வந்திருக்கிறார். உங்களுடைய வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் தமிழ்ச்செல்வியை கல்லூரிக்கு அழைத்து செல்லுங்கள் என்றெல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை கேட்டு ராஜங்கத்தால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் தமிழ், கல்லூரிக்கு எப்படி போவது என்று புலம்பி கொண்டு இருக்கிறார். பின் ராஜாங்கம், கட்சி தலைவரின் மனைவி எல்லோருமே சேது- தமிழ் இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள். அப்போது தமிழை கல்லூரிக்கு அழைத்து செல்லும் விஷயமாக சேதுவிடம் பேசுகிறார்கள். சேதுவால் எதுவும் சொல்ல முடியாமல் ஒத்துக் கொள்கிறார். இதைக் கேட்டு தமிழ் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full