தேர்தலில் நிற்க சொல்லி சவால் விடும் சேது, தமிழ்செல்வி எடுக்கும் முடிவு என்ன? சின்ன மருமகள்

By subhashini · 23/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் அதை எதையும் காதில் வாங்காதது போல் ஹெட்செட்டை கழட்டி காட்டினார். சேதுவிற்கு கோபம் தான் வந்தது. பின் தமிழ்செல்வி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது சேது தேர்தலில் நிற்கும் விஷயத்தை வீட்டில் உள்ள எல்லோரிடம் சொன்னார். அப்போது ராஜாங்கத்திற்கு எதிர்க்கட்சியாளர்கள் தமிழின் வீட்டிற்கு வந்து சேதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது தொடர்பாக பேசி இருந்தார்கள். தமிழ்செல்வி, அதெல்லாம் முடியாது. இங்க இருந்து கிளம்பி போங்க என்று திட்டி அனுப்பி விட்டார்.

அப்பத்தா, தமிழுக்கு போன் செய்து நலம் விசாரித்தார். தமிழுமே அப்பத்தாவுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். பின் அப்பத்தா, உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக என்னை அழை என்றார். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே கட்சிக்கு என்ன சின்னம் வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். சேது, ஆப்பிள் சின்னம் வைக்கலாம் என்று சொன்னார். இதை ஈஸ்வரியும் அவருடைய மகளும் சிரித்துக்கொண்டு நக்கலாக பேசி கொண்டார்கள்.

சின்ன மருமகள்

இன்னொரு பக்கம் பெண்களின் நல வாழ்வுக்காக போராடும் லட்சுமி என்பவரை தமிழ் சந்தித்து பேசி இருந்தார். அப்போது லட்சுமி, இந்த வருடம் தேர்தலில் பெண்களுக்காக நீங்கள் நிற்க வேண்டும் என்றார். தமிழ், எனக்கு அந்த எண்ணம் இல்லை. நான் படிப்பில் தான் கவனம் செலுத்த போகிறேன் என்றார். இருந்தாலும் லக்ஷ்மி விடாமல் தேர்தலில் நிற்பதற்காக கேட்டுக் கொண்டிருந்தார். தமிழும் நான் யோசித்து முடிவு சொல்கிறேன் என்று கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரிக்கு போன் செய்த எதிர்கட்சியாளர், தமிழ் காசு வாங்கி சேதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்றார். இதை அறிந்தவுடன் ஈஸ்வரி சந்தோசப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேதுவிற்கு போன் செய்த ஈஸ்வரி, எதிர்க்கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக தமிழ் பணம் வாங்கி இருக்கிறார் என்று பொய்யான தகவலை சொல்லி விடுகிறார். இதனால் சேது பயங்கரமாக கோபப்படுகிறார். ராஜாங்கம், சேது இருவரும் சேர்ந்து ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த இடத்திற்கு தமிழ் வருகிறார். தமிழை பார்த்தவுடன் சேது வேண்டுமென்றே வம்பு இழுத்து பேசிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் தமிழ் அதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்புகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் தமிழை தனியாக சந்தித்து சேது, எதிர்க்கட்சியிடம் காசு வாங்கி பிரச்சாரம் செய்யும் அளவுக்கு உன் நிலைமை வந்து விட்டதா? இந்த கேவலமான வேலைக்கு பதில் என்னை எதிர்த்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று காண்பி என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். தமிழ்செல்வி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். அதற்குப்பின் தனம் தனியாக நடந்து வந்து கொண்டிருக்கும் போது ரவுடிகள் அவரிடம் வம்பு இழுக்கிறார்கள். இதை சேது, அந்த ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து தனத்தை காப்பாற்றுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full