மாப்பிளையை பற்றி தீவிரமாக விசாரிக்கும் சேது, கண்மணி எடுத்த முடிவு - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 31/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவின் அத்தை,சித்தி இருவருமே மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். உடனே தமிழ் செல்வி, நான் ஓட்டலில் வேலை செய்கிறேன். அதனால் தான் வருவதற்கு லேட் ஆனது. இதெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கிளம்பி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்செல்வி இடம் சேது, எதற்காக நீ ஓட்டலில் வேலை செய்தார். வேறு ஏதாவது வேலை பார்க்கலாமே? என்று சொன்னார். அதற்கு தமிழ்செல்வி, எனக்கு படிப்பு செலவு, வீட்டு செலவு, ஹாஸ்பிடல் செலவு என்று நிறைய செலவிருக்கிறது. அதையெல்லாம் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

மறுநாள் காலையில் கண்மணி, என் திருமணத்திற்கான வேலைகள் மும்முரமாக நடக்கிறது. இன்னொரு பக்கம் தமிழ்செல்வி அம்மா, தன்னுடைய கணவரை பார்ப்பதற்காக ஜெயிலுக்கு சென்றிருந்தார். அப்போது தமிழ்செல்வியை பற்றி எல்லாம் சொன்னார். அதோடு கண்மணிக்கு கல்யாணம் நடக்கும் விஷயத்தையும் சொன்னார். மாப்பிள்ளை பற்றி கேட்டவுடன் தமிழ் செல்வின் அப்பா ஷாக் ஆனார். பின் அவர், சரியான பொம்பள பொறுக்கி. அவனுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. தயவு செய்து இந்த கல்யாணத்தை நிறுத்தி என்று சென்றார்.

சின்ன மருமகள் சீரியல்:

தமிழ்ச்செல்வியை பார்க்க அவருடைய அம்மா ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தமிழ்செல்வி அம்மா, கண்மணிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரொம்ப கெட்டவன்.
பல பெண்களுடன் பழக்கம் இருக்கிறது. அவனுக்கு தீராத வியாதி எல்லாம் இருக்கிறது என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டவுடன் தமிழ்ச்செல்வி அதிர்ச்சியானார். இன்னொரு பக்கம் வீட்டில் கண்மணியை பார்க்க ஆறுமுகம் வந்தார். அப்போது கண்மணி, நீங்கள் என் கழுத்தில் தாலி கட்டவில்லை என்றால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று சொன்னார். இதை கேட்டு ஆறுமுகம் ரொம்பவே எமோஷனலாக அழுதார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி வந்து விட்டார்.

நேற்று எபிசோட்:

பின் ஆறுமுகம், ஏதோ சொல்லி சமாளித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே கல்யாணத்திற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் சேதுவை பார்த்து தமிழ்ச்செல்வி, மாப்பிள்ளை பற்றி விசாரித்தீர்களா? என்று கேட்டார். அதற்கு சேது, உனக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்டார். அப்போது தமிழ்செல்வி, மாப்பிள்ளை பற்றி தன் அப்பா சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டவுடன் சேது கோபப்பட்டு தமிழ்செல்வியை தான் திட்டினார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் செல்வதால் கருப்பு வீட்டிற்கு வருகிறார். பின் கருப்பு சேதுக்கிடையே இருக்கும் பிரச்சனையை அறிந்து கொண்ட ராஜாங்கம் சேதுவை வர வைத்து பேசுகிறார். பின் சேது- கருப்பு இருவருமே சேர்ந்து விடுகிறார்கள். அதற்கு பின் சேது, மாப்பிள்ளையை பற்றி ஒவ்வொரு உறவினர்களிடமும் விசாரிக்கிறார். ஆனால், அதற்கு முன்பே மாப்பிள்ளை அப்பா தன் மகனைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். இதனால் சேதுவிடம் மாப்பிள்ளை பற்றி எந்த ஒரு தவறான செய்தியும் கிடைக்கவில்லை.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் சேது விசாரிப்பதை அறிந்து கொள்கிறார் மாப்பிள்ளையின் அப்பா. பின் சேதுவுக்கு போன் செய்த மாப்பிள்ளை அப்பா, திருமண நேரத்தில் இப்படி செய்யாதீர்கள். எங்களுக்கு என்று ஒரு கௌரவம் இருக்கிறது என்று சொல்வதால் சேது அமைதியாகி விடுகிறார். இன்னொரு பக்கம் ஆறுமுகத்திற்கு போன் செய்த கண்மணி, இன்னும் ஒரு நாளில் எனக்கு கல்யாணம். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள். இரண்டு பேரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிடலாம் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஆறுமுகம் அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full