தன் தந்தையை காப்பாற்ற போராடும் சேது, குழம்பி தவிக்கும் மருத்துவர்கள் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் விஷ வண்டு ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு வந்தது. மலைவாழ் மக்கள் எல்லோருமே பயந்து கொண்டு உள்ளே போங்க என்று கத்தினார்கள். இருந்தாலுமே ராஜாங்கத்தின் குடும்பத்தில் உள்ள எல்லோரும் மீதும் அந்த வண்டு கொட்டி விடுகிறது. ராஜாங்கத்தின் மனைவிக்கு மட்டும் ஒன்னும் ஆகவில்லை. எல்லோரும் வலி தாங்க முடியாமல் தவித்தார்கள். பின் சேதுக்கு போன் செய்து தகவலை சொன்னார்கள்.
நேற்று எபிசோட்டில் ராஜாங்கத்தின் குடும்பம் விச பூச்சியால் அவஸ்தைப்பட்டு இருக்கும் விஷயத்தை சேது தெரிந்து கொண்டார். பின் அதை பற்றி கேம்பில் எல்லோரிடமும் சொன்னார். அங்கு இருக்கும் கிராம மக்கள், அது கொடூரமான விஷத்தன்மை பூச்சி. அது கொட்டினால் யாருமே உயிர் பிழைக்க மாட்டார்கள். எல்லோருமே இறந்து விடுவார்கள். நீங்கள் அங்கு போகாதீர்கள் என்றார். என் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று சேது -தமிழ்ச்செல்வி இருவருமே ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு போனார்கள்.
சின்ன மருமகள்:
பின் சேது-தமிழ் இருவரும் தீ பந்தத்தை காண்பித்து ராஜாங்கம் குடும்பத்தை ஒரு வழியாக அந்த இவண்டுகளிடமிருந்து காப்பாற்றி அழைத்து வந்தார்கள். வரும் வழியில் தமிழ்ச்செல்வி எல்லோருக்குமே ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன் போட்டார். வலி தாங்க முடியாமல் ஒவ்வொருவருமே கதறிக் கொண்டிருந்தார்கள். அதோடு வண்டு பூச்சியால் கடிபட்டவர்கள் இறந்து கிடந்தார்கள். அதை பார்த்து சேது- தமிழ் இருவருமே பதறி போனார்கள்.
இன்றைய எபிசோட் :
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மருத்துவர்கள் எல்லோருமே என்ன செய்வது என்று புலம்பி இருக்கிறார்கள். அந்த இடத்திற்கு சித்தர் போல ஒருவர் வருகிறார். அவர், இந்த விச வண்டு கடித்தால் அதற்கு மருந்தே கிடையாது. பல மைல் தூரத்தில் அந்த விஷ வண்டுகள் கூடு கட்டி இருக்கு. அந்த இடத்தில் தான் அதற்கான மருந்து இருக்கிறது. ஆனால், அந்த இடத்திற்கு போனவர்கள் யாருமே உயிருடன் திரும்பி வருவதில்லை. அந்த மருந்தை எடுத்து வருவது கடினம். இவர்களை காப்பாற்றுவதும் நடக்காத ஒன்று என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோருமே பதறுகிறார்கள். அதற்குப்பின் சேது தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு கேம்பிற்கு வந்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
மருத்துவர்கள் எல்லோருமே அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையும் கொடுக்கிறார்கள். இருந்தாலுமே எல்லோருமே வழி தாங்க முடியாமல் கதறிக் கொண்டு இருக்கிறார்கள். சேதுவும் தன்னுடைய குடும்பத்தை நினைத்து ரொம்பவே பரிதவித்து நிற்கிறார். இன்னொரு பக்கம் போஸ், எதிரியுடன் சேர்ந்து ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள். வண்டு கடித்து ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே ஹாஸ்பிடலில் அவஸ்தை பட்டு இருப்பதை அறிந்து சந்தோஷப்படுகிறார்கள். போஸ், தன்னுடைய அம்மா, தங்கை இருவருமே பாதிக்கப்பட்டு இருப்பதை நினைத்து கவலைப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.