அப்பத்தா சொன்ன வார்த்தை, பரிகாரத்தை ராஜாங்கம் குடும்பம் செய்து முடிப்பார்களா? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ், நீங்கள் ஒவ்வொரு கோயிலில் உட்கார்ந்து பிச்சை எடுங்கள். அப்போதுதான் சாப்பிட முடியும் என்று சொல்வதால் இருவருக்குமே பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் சேது, தமிழுக்காக ஒரு பரிசு கொடுத்தார். அதில் சேது, எப்பவுமே தமிழை விட்டு பிரிய மாட்டேன் என்று சேது வாக்குறுதி எழுதியிருந்தார். அந்த பேப்பரில் சேது கையெழுத்து போட்டு இருந்தார். பின் தமிழ்ச்செல்வி அதில் கையெழுத்து போட்டார். இருவரும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் காவடி எடுப்பதற்கு ராஜாங்கத்தின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே தயாராகி வந்தார்கள்.
வீட்டில் உள்ள எல்லோருமே பரிகாரத்தை செய்ய கிளம்பினார்கள். ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே காவடி எடுக்க தயாராகி இருந்தார்கள். ராஜாங்கம், சூரிய கிரகணம் முடிவதற்குள் இந்த பரிகாரத்தை செய்யணும் என்றார். பின் வீட்டில் எல்லோருமே காவடி தூக்கிக்கொண்டு கோயிலுக்கு சென்றார்கள். முருகருடைய பாட்டு பாடி ஆட்டம் பாட்டம் என்று சந்தோஷமாக போனார்கள். அப்போது சாவித்திரி, காவடியில் கலந்து கொள்ள தன் தாயிடம் கெஞ்சி இருந்தார்.
சின்ன மருமகள்:
ராஜாங்கத்தின் காலில் விழுந்து சாவித்ரி கெஞ்சுகிறார். ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. பின் எல்லோருமே சந்தோசமாக காவடி எடுத்துக்கொண்டு வந்தார்கள். ஈஸ்வரிக்கு இதெல்லாம் பார்த்து பயங்கர கடுப்பானது. அந்த சமயம் பார்த்து ராஜாங்கத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. ராஜாங்கம் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழ பார்த்தார். சேது தன் தந்தையை கவமனாக பார்த்துக் கொண்டார். அப்பத்தா எல்லோருமே பதறினார்கள். ராஜாங்கத்தின் உடல்நிலை மோசமாக இருப்பதால் டாக்டரை அழைத்தார்கள்.
சீரியல் ட்ராக்:
ராஜாங்கத்தை செக் செய்த டாக்டர், அவர் இனிமேல் நடக்க முடியாது. அவருக்கு ஓய்வு தேவை என்றெல்லாம் சொல்வதால் எல்லோருமே அங்கேயே தங்கினார்கள். அப்போது சாவித்திரியை சந்தித்து ஈஸ்வரி ரொம்ப ஏளனமாக பேசிக் கொண்டிருந்தார். சித்ராவும் பதிலுக்கு சாவித்ரி-தாமரை இருவரையும் கிண்டல் செய்தார். அப்போது ஈஸ்வரி, இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் நான் தான். நான் பிளான் செய்து உங்களை காமேஷ் பிச்சையிடம் சிக்க வைத்தேன் என்று சொல்லி சிரித்தார். இதை கேட்ட சாவித்திரி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். அதற்குப்பின் அப்பத்தா எல்லோருக்குமே சாப்பாடு உருண்டை பிடித்துக் கொடுத்தார்கள். இதை ஓரமாக நின்று பார்த்த சாவித்திரி கஷ்டப்பட்டார்
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாவித்திரி பசியோடு இருப்பதை பார்த்து அப்பத்தா சாப்பாடு கொடுக்கிறார். அதற்கு பின் எல்லோருமே அதே இடத்தில் படுத்து உறங்குகிறார்கள். அப்போது வானில் எரிகள் போவதால் தமிழ்-சேது இருவரும் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். அதற்குப்பின் எல்லோரும் தூங்கி எழுந்து மீண்டும் தங்களுடைய பாத யாத்திரையை தொடங்குகிறார்கள். அப்பத்தா, நானும் நடக்கிறேன் என்று சொல்கிறார். எல்லோரும் வேண்டாம் என்று சொல்லியுமே அப்பத்தான் கேட்கவில்லை.
வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக முருகனின் பாட்டை பாடிக்கொண்டு நடக்கிறார்கள்