ஈஸ்வரியின் சகுனி ஆட்டம், சேது எடுத்த முடிவால் ஆடிப்போன அப்பத்தா, தமிழ் நிலைமை? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் சேது வெற்றி பெற்று விட்டார். இருந்தாலும் இறுதி கட்டம் வரை சேதுவை பதட்டத்துடன் வைத்து இருந்ததால் தமிழ்ச்செல்வியை எல்லோருமே பாராட்டினார்கள். தமிழ்செல்வியின் முயற்சியும் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்கள். பின் தமிழ் செல்வி, தான் துவங்கிய புதிய சாப்பாட்டு தள்ளுவண்டி கடையை லட்சுமி கையால் திறந்து வைக்க சொல்கிறாள். இன்னொரு பக்கம் சேது வெற்றி பெற்றதால் வீட்டில் உள்ள எல்லோருமே கொண்டாடினார்கள். ராஜாங்கம் ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்.
ஈஸ்வரி, சாவித்திரி எல்லோருமே தமிழ்செல்வியின் பெயரைச் சொல்லி சேதுவை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக தேர்தலில் நடந்ததை சொல்லி கட்டுப்பேற்றினார்கள். ஒரு கட்டத்தில் சேது எல்லோரையும் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய கேரியரின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் ஈஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் ராஜாங்கத்தை நடுநடுங்க வைத்த தமிழ்ச்செல்வி என்று ஊர் முழுக்க போஸ்டர் ஒட்ட சொன்னார்.
சின்ன மருமகள்:
ராஜாங்கம்-சேது இருவரும் தங்களை வெற்றி பெற வைத்த மக்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டு வந்தார்கள். அப்போது தமிழ்ச்செல்வியின் போஸ்டரை பார்த்து சேது, ராஜாங்கம் கோவப்பட்டார்கள். சேதுவின் அண்ணன் அந்த போஸ்டரை கிழித்து போட்டார். வீட்டிற்கு வந்தவுடன் சேது, தமிழ்ச்செல்வியின் மீது கொந்தளித்துக் கொண்டிருந்தார். ஈஸ்வரி இதுதான் சந்தர்ப்பம் என்று தமிழ்ச்செல்வியை பற்றி ரொம்ப மோசமாக பேசி சேதுவின் மனதில் நஞ்சை வளர்த்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் தங்களுக்கு எதிராக ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியது தமிழ் தான் என்று தவறாக புரிந்து கொண்டு சேதுபதி கொந்தளிக்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, சாவித்திரி இருவருமே ஏற்றி விடுகிறார்கள். அப்பத்தா சொல்வதைக் கூட சேதுபதி கேட்கவில்லை. ராஜாங்கம், எது நடந்தாலும் நம்முடைய வேலையில் கவனம் செலுத்தலாம் என்று அறிவுரை சொல்கிறார். அதற்குப்பின் சேது தனியாக இருக்கும் நேரம் பார்த்து ஈஸ்வரி, நீ தமிழை பழிவாங்க வேண்டும் என்றால், அவளை உன் வாழ்க்கையை விட்டு விலகி விடு.
சீரியல் ட்ராக்:
நீ வேறு ஒரு கல்யாணம் செய்து கொள் என்று சொல்கிறார். இதைப்பற்றி சேது தீவிரமாக யோசிக்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து சேது, என்னையும் தமிழ்செல்வியையும் முடித்துவிடுங்கள். இனி அவளுடன் நான் சேர்ந்து வாழப்போவதில்லை என்று சொல்கிறார். இதைக் கேட்டு அப்பத்தா கதறி அழுகிறார். ராஜாங்கத்திற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஈஸ்வரி- சாவித்திரி இருவருமே சேதுவின் முடிவை பாராட்டுகிறார்கள். சேது, நான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அதற்கான முடிவை நீங்கள் எடுங்கள் என்று சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டு மலர் ரொம்பவே அழுகிறார். பின் இதைப் பற்றி மலர்- கருப்பன் இருவரும் தமிழுக்கு போன் செய்து சொல்கிறார்கள்.