போஸின் பித்தலாட்ட வேலையை கண்டுபிடித்த சேது, உண்மை சொல்வாரா தமிழ்செல்வி? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மலர் படிப்பதற்கு அனுமதி கேட்டார். இதை கேட்ட ஈஸ்வரி, கொந்தளித்து பயங்கரமாக திட்டினார். அதற்கு தமிழ், மலர் இந்த வீட்டு மருமகள் கிடையாது. அதற்காக அவர் வேலைக்காரியும் கிடையாது என்று சொல்கிறார். இதைக் கேட்ட சாவித்திரி, பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். நாங்கள் மலர் படிக்க சப்போர்ட்டாக இருப்போம் என்றெல்லாம் ஈஸ்வரியை வெறுப்பேற்ற செய்தார். ராஜாங்கம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
சாவித்திரி, நான் மலருக்காக தான் சப்போர்ட் செய்வேன். பெண் கல்வி ரொம்ப முக்கியம் என்றெல்லாம் ஈஸ்வரி வெறுப்பேற்றுவதற்காகவே பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, சாவித்திரிக்கு இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை நடக்கிறது. உடனே ராஜாங்கம், எல்லோரும் அமைதியாக இருங்கள். மலர் மேற்கொண்டு படிக்கட்டும். 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு வா, உன்னை வக்கீலுக்கு நான் படிக்க வைக்கிறேன் என்றார். இதைக் கேட்டு மலருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
சின்ன மருமகள் சீரியல்:
அதற்குப்பின் போஸ் பார்ட்டி வைப்பதால் சேது, கருப்பன் எல்லோருமே கலந்து கொண்டு தண்ணி அடித்தார்கள். அந்த சமயம் பார்த்து போன் செய்த காவியா, உடனடியாக ஜூஸ் கடைக்கு வர சொன்னார். இதனால் போஸ், துண்ட காணோம், துணியை காணோம் என்று உளுந்து அடித்துக் கொண்டு ஓடினார். பின் போன இடத்தில் காவியா, கண்களில் மட்டும் தான் பேசணும். எனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும் என்றெல்லாம் நிறைய கண்டிஷன் போட்டார். அதற்குப்பின் சேது, போஸ் பொண்டாட்டி தாசன் ஆக மாறிக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் கிண்டல் செய்தார். இதை கேட்ட தமிழ், ஒரு காலத்தில் நீங்களும் பொண்டாட்டி தாசன் ஆக இருந்தவர் தான் என்று சொல்வதால் பிளாஷ் பேக்கை காண்பித்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் தமிழ்- சேது இருவருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நினைத்து பார்க்கிறார்கள். அதற்குப்பின் கருப்பன் போன் செய்து சேதுவை வரவைக்கிறார். பின் சேது, போஸ் கருப்பன் எல்லோருமே நன்றாக குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சேது, வண்டு கடிக்கு மருந்து எடுத்து வந்த விஷயத்தைப் பற்றி சொல்கிறார். பின் போஸ் வாயில் உண்மையை வரவைக்க ஒரு பொய்யான கதையை சொல்கிறார். இதை கேட்டு போஸ், நானும் நீங்க சொன்னது போல் பொடியை தூவி
செடியிலிருந்து மருந்தை எடுத்து வந்தேன் என்றெல்லாம் பொய் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதை கேட்டு சேதுவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பின் போஸ் மருந்தை எடுத்து வரவில்லை என்ற விஷயம் சேதுவிற்கு தெரிந்து விடுகிறது. அதற்குப்பின் தமிழை சந்தித்த சேது, மருந்து எடுத்துட்டு வர ரெண்டு பேரும் தான் போனோம். ஆனால், நான் வரும்போது நீ தலையில் அடிபட்டு மயங்கி விழுந்து கிடந்தாய். நீ மருந்து எடுத்தாயா? உனக்கு என்ன நடந்தது? என்று கேட்கிறார். தமிழ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.